இந்திய தண்டனைச் சட்டம் 497 நீக்கம் : நேற்று (27/09/2018) உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ நீக்கி உத்தரவிட்டது. இச்சட்டமானது திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கும் ஆணின் மீது புகார் அளிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து அந்த ஆணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் ஒன்றாகும்.
இந்த சட்டத்தினை ரத்து செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசுட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய நீதிமன்ற அமர்வு தீர்ப்பினை நேற்று வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
ஸ்வாதி மலிவால்
இந்திய தண்டனைச் சட்டம் 497 நீக்கம் - ஸ்வாதி மலிவால் கருத்து
டெல்லி பெண்கள் கமிஷனின் தலைவர் ஸ்வாதி மலிவால் இந்த தீர்ப்பினை பெண்களுக்கு எதிரான தீர்ப்பு என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்கி சட்டம் 497 அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் “இந்த நாட்டில் திருமணம் செய்ய அனைத்து மக்களும் உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே தான் திருமணத்திற்கு புறமான தகாத உறவை வைத்துக் கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அவர்கள் திருமண உறவில் இருப்பவர்களுக்கு தகாத உறவில் ஈடுபடுவதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது. இதில் திருமணத்திற்கு என இருக்கும் புனிதம் எங்கே?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தண்டனைகள் வழங்குவதை விட்டுவிட்டு இருவரும் தகாத உறவில் ஈடுபடுவது தவறில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. இது முற்றிலும் பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
To read this article in English
நம் சமூகத்தில் ஆண்கள் இரண்டு அல்லது மூன்று திருமணங்களை மிக சாதாரணமாக செய்து கொள்வார்கள். ஆனால் முதல் அல்லது இரண்டாவது மனைவியை அவர் விட்டுவிட்டுச் செல்லும் போது எக்கச்சக்க பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே இது குறித்து தெளிவான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் தர வேண்டும் என ஸ்வாதி மலிவால்.