மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
டிரம்புக்கு இந்தியாவில இப்படியும் ஒரு ரசிகர் : டிரம்ப் சிலைக்கு தினமும் அபிஷேக ஆராதனை
ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பெரும் இடையூறாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்தது.
இந்நிலையில், சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே இருவரும் ஷாஹீன் பாக் போராட்டக் குழுவினருடன் இன்று பேச்சு நடத்தினர்.
19, 2020
சாதனா ராமச்சந்திரன் பேசுகையில், " போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உண்டு, அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற குடிமக்களின் உரிமையும் பாதிக்கப்படக்கூடாது, அதை மதிக்க வேண்டும். இப்படி அனைவரும் சாலையை மறித்து போராட்டம் நடத்தினால், மக்கள் எங்குச் செல்வார்கள்?. நாம் அனைவரும் சேர்ந்து பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டும்.
இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க 15 ஆவணங்களும் போதவில்லை... என்.ஆர்.சியில் நீடிக்கும் குழப்பம்!
ஊடகத்தினர் முன் நீங்கள் வேண்டுமானால் பேசுங்கள், எங்களால் பேச முடியாது. நாங்கள் 4 நாட்கள் பேச்சு நடத்த அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன்பின் வேறு வழியில் பேசுவோம்" எனத் தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் வழக்கறிஞர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.