காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு காரணத்துக்காக டிரெண்டாகி விடுவார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக எம்.பி. ஃபரூக் அப்துல்லா நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவிடம் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார் சசி தரூர்.
இந்த 45 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒர்க் லைஃப் பேலன்ஸ் செய்கிறார் சசி தரூர் என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
டெல்லி ரகசியம்: ராஜ்யசபாவில் திடீரென ஒலித்த ‘My Lord’… பாஜக எம்.பி மன்னிப்பு!
அதிலும் உச்சகட்டமாக இந்த வீடியோவை எடிட் செய்து, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடலை ஒலிபரப்பி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
முன்னதாக, எம்.பி. சசி தரூரும் நாடாளுமன்றத்தில் உக்ரைன் விவகாரம் குறித்து பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர், 40 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டதற்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil