Covid19 second wave : நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்ற சூழலில், மத்திய அரசு மாநில அரசுகளை எச்சரிக்கை செய்துள்ளது. சூழல் மோசத்தில் இருந்து படுமோசமாக மாறி வருவதாகவும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் அடுத்த 2 வாரத்திற்குள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை 100% வழங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் கட்ட தடுப்பூசியை நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்றில் 70% தொற்று குறிப்பிட்ட 46 மாவட்டங்களில் தான் ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனா தொடர்பாக ஏற்பட்ட 90% இறப்புகள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதையும் அது அறிவித்துள்ளது.
அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படும் மாவட்டங்கள் மற்றும் ஏற்கனவே அதிக அளவில் கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் 45 வயதிற்கும் அதிகமான மக்களுக்கு அடுத்த 2 வாரத்தில் கட்டாயம் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று சுகாதாரத்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஒட்டுமொத்தமாக ஏற்பட்டிருக்கும் தொற்றில் 78.56 சதவீதம் இந்த மாநிலங்களில் இருந்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. நிலைமை மோசமாகி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் மிகவும் ”ஆக்டிவாக” இருக்கிறது, அது நம்முடைய பாதுகாப்பை உடைக்க தயார் நிலையில் இருக்கிறது.
நாம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிகளை கண்டுபிடித்திருந்தால் அது வேறு வழியில் நம்மை தாக்குகிறது. முன்பு 1 லட்சம் வழக்குகள் இருந்தன. தற்போது 5.4 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளாது. மூன்றில் இரண்டு பங்கு தொற்றுகள் குறிப்பிட்ட மாநிலங்களை சேர்ந்தது. இது ஐந்து மடங்கு அதிகரித்து இருக்கின்ற சூழல். என்று நாட்டின் கொரோனா தொற்று தடுப்பு பணிக்குழுவின் தலைவராக இருக்கும் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் சராசரி நேர்மறை விகிதம் (Positivity Rate) 23.65 சதவீதமாக இருந்தது, இது தேசிய அடையாளமான 5.65 சதவீதத்திற்கு எதிராக உள்ளது. பெங்களூரு மற்றும் டெல்லி தவிர, நாட்டில் அதிகபட்சமாக செயலில் உள்ள முதல் பத்து மாவட்டங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை.
மகாராஷ்ட்ரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் நிலை கவலை அளிக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி அன்று மகாராஷ்ட்ராவில் 3,051 நோய் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டது. 32 இறப்புகள் ஏற்அட்டது. மார்ச் 24ம் தேதி அன்று 34,456 பேருக்கு கொரோனா தொற்றும் 118 நபர்களுக்கு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த தரவுகளை வார நேர்மறை விகிதமான 23.44%த்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது மிகவும் சாதாரணமாக பொதுசுகாதாரத்துறையின் செயல்பாடுகள் முறையாக நடைபெறவில்லை என்பதையே காட்டுகிறது என்றார் பூஷன்.
பஞ்சாப் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 240 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று கூறியது. ஆனால் மார்ச் 24ம் தேதி நாள் ஒன்றுக்கு 2,742 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் நேர்மறை விகிதம் 8.82% ஆக உள்ளது. இது பஞ்சாப் அளவுக்கு அதிகமாக சோதனை மேற்கொள்ளவில்லை என்றும், தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படவில்லை என்பதையும் காட்டுகிறது என்றார்.
கடந்த வாரத்தில் அதிகபட்ச சராசரி நேர்மறை விகிதத்தைக் கொண்ட ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (23.44 சதவீதம்), பஞ்சாப் (8.82 சதவீதம்), சத்தீஸ்கர் (8.24 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (7.82 சதவீதம்), தமிழ்நாடு (2.50 சதவீதம்). “கடந்த சில நாட்களில் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை வாராந்திர தரவு காட்டுகிறது. இந்த மாநிலங்களில் சோதனையை கணிசமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை அதிவேகமாக அதிகரிக்க வேண்டும். ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விகிதத்தை மாநிலங்களும் அதிகரிக்க வேண்டும், ”என்று பூஷன் கூறினார்.
கடந்த சில நாட்களில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது தொடர்பாகவும் பால் எச்சரிக்கை செய்தார். ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன் தினம் 68 ஆயிரமாக உயர்ந்தது. 6-7 மடங்கு அதிகமாக உள்ளது. குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடு என்ற பெயரை நாம் எடுத்தோம். ஆனால் தற்போது இறந்து வருபவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் அனைத்து பகுதிகளிலும் தெளிவாக, நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்பு தடமறிதல், தொடர்புகளை தனிமைப்படுத்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்காமல் இருத்தல் போன்றவை நோய் தொற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று பால் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளும் இறப்பு விகிதத்தை குறைக்க கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஏன் இறப்புகள் ஏற்படுகிறது என்ற மதிப்பீட்டை உருவாக்கவும், மிகவும் தாமதமாக நோய் தொற்று கண்டறியப்பட்டது தான் காரணமா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பூஷன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.