Solar Eclipse 2020 in India Live Updates: சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போதே அல்லது நேர் உள்ளமைப்பில் வரும்போது, சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வரும்போது, சூரியனின் கதிர்கள் பூமியை மறைக்கும் நிகழ்வே, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம். சூரிய கிரகணங்கள் அதன் நிலையை பொறுத்து பகுதி, முழு மற்றும் அரிய சூரிய கிரகணம் என்று 3 வகைகளாக பிரிக்கிறோம்.
இன்று சூரிய கிரகணம்: எந்த ஊர்களில் தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?
அரிய சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் பார்க்கலாம்?
இன்று ( ஜூன் 21ம் தேதி) நிகழ உள்ள சூரிய கிரகணம், முழு அல்லது வளைவு சூரிய கிரகணம் ஆகும், இன்று, சூரியனின் கதிர்கள் முழுமையாக பூமியை மறைத்து, சூரியனை சுற்றி, ஒரு முழு வளையமாக தெரியும். இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணியளவில் கிரகணம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.29 மணியளவில், கிரகணம் நிறைவடையும். இந்த கிரகணத்தை நேரடியாக பார்க்கக்கூடாது என்றும் பார்த்தால் கண்ணில் கருவளையம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Solar Eclipse or Surya Grahan 2020 Today in India Live Updates: சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்
நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி கிராம மக்கள் கிரகணத்தை உறுதி செய்ய உதவும் பழங்கால கருவிதான் இந்த உலக்கை, எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நேரடியாக அந்தரத்தில் இருப்பது போல இயற்கையாகவே நிற்கும் இதனைக் கொண்டுதான் கிராமப்புற மக்கள் கிரகணத்தை உறுதிசெய்து கொள்வார்கள்.#SolarEclipse #TN pic.twitter.com/uemXn4q0X2
— AIR News Chennai (@airnews_Chennai) June 21, 2020
தேனி மாவட்டத்தில் மேகக்கூட்டமானதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாவிட்டாலும் பண்டைய கால ஆய்வு முறையான உலக்கை உரலில் நிற்கும் நிகழ்வு மூலமாக கிரகணம் உணரப்பட்டது.#SolarEclipse #India #TamilNadu #TN #Eclipse #SolarEclipse2020 pic.twitter.com/QTnXKmFpr8
— AIR News Chennai (@airnews_Chennai) June 21, 2020
தேனி மாவட்டத்தில் மேகக்கூட்டமானதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாவிட்டாலும் பண்டைய கால ஆய்வு முறையான உலக்கை உரலில் நிற்கும் நிகழ்வு மூலமாக கிரகணம் உணரப்பட்டது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தூத்துக்குடி அந்தோணியார்புரம் முத்துக்குமார் என்பவர் விட்டில் சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி.
Pic: LAKSHMANAN#SolarEclipse #India #TamilNadu #TN #Eclipse #SolarEclipse2020 pic.twitter.com/gPrWxED7Ts— AIR News Chennai (@airnews_Chennai) June 21, 2020
தூத்துக்குடி அந்தோணியார்புரம் முத்துக்குமார் என்பவர் விட்டில் சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது.
Coimbatore - Ukkadam#சூரியகிரகணம் pic.twitter.com/BKaDXzgvdu
— கார்த்திக் சதிஸ்குமார் (@karthisathees) June 21, 2020
• இன்று #சூரியகிரகணம் எனக்கு கிரகணம் பிடிக்கக்கூடாது என்று எனது காதில் எங்கம்மா தர்ப்பைப்புல் வைத்துவிட்டார்கள் 🤣🤣🤣🤣😂😂😂😂 pic.twitter.com/PRUJ7tjLcN
— Alex ANGURAJ (@AlexAngurajoffl) June 21, 2020
Art 51 A of the #constitution;
To develop the #scientific temper& spirit of inquiry-not cook or eat
- Pregnant women & children must stay indoors
-inauspicious& bad omen#மூடநம்பிக்கை களைவோம்; நல்ல சமுதாயம் அமைப்போம்#SolarEclipse2020 #சூரியகிரகணம் pic.twitter.com/ajzCnWewLr— Vijayakumar IPS (@vijaypnpa_ips) June 21, 2020
சமைக்கவோ சாப்பிடவோ கூடாது
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்
மோசமான சகுனம்
போன்ற சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கை களைவோம்; நல்ல சமுதாயம் அமைப்போம் என்று விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி ட்வீட் செய்தார்.
இந்தியாவில் உள்ள அனுப்கர், சூரத்கர், சிர்சா, ஜக்கல், குருச்சேத்ரா, யமுனாநகர், டேராடூன், தபோவன், ஜோஷிமத் ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணத்தை காணமுடிந்தது. இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தை மட்டும் கண்டனர்.
அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்து வருகிறது.
இந்த வாய்ப்பை நாம் நழுவவிட்டால், இந்தியாவில், அடுத்த சூரிய கிரகணத்துக்கு நாம் 28 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த சூரிய கிரகணத்தை, பகுதி சூரிய கிரகணமாக, இந்தியாவில் 2022 அக்டோபர் 25-ஆம்தேதி காணலாம். இதனை நாட்டின் மேற்குப் பகுதியில் காணலாம்’’, என்று இந்திய வானியல் கழகத்தின் கள ஆய்வு மற்றும் கல்விக்குழுவின் தலைவர் அனிக்கெட் சுலே கூறினார்
1. வெறும் கண்களால் நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது.
2. சூரிய கிரகணத்தைப் பார்க்க எக்ஸ்-ரே பிலிமையோ அல்லது சாதாரண சன் கிளாஸையோ (யூவி பாதுகாப்பு இருந்தாலும் கூட) பயன்படுத்தக் கூடாது.
3. சூரிய கிரகணத்தைப் பார்க்க வர்ணம் பூசிய கண்ணாடியையும் பயன்படுத்தக் கூடாது.
4. இந்த சூரிய கிரகணத்தை பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.
1. சூரிய கிரணத்தை கண்ணால் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை (ஐ.எஸ்.ஓ சான்றளிக்கப்பட்டது) அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
2. வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வைப் பார்ப்பதற்கு, பாதுகாப்பான வழி எதுவெனில் தொலைநோக்கியை பயன்படுத்துதல் அல்லது பின்ஹோல் கேமராவை பயன்படுத்தி திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்த்தல் மட்டுமே ஆகும்.
3. சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.
சூரிய கிரகணத்தை சூரியனை நேரடியாக வெற்றுக் கண்களால் காணக்கூடாது. அப்படிப் பார்த்தால் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகணத்தைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்பான நுட்பம் - அலுமினிய மைலர், கறுப்பு பாலிமர், வெல்டிங் கிளாஸ் நிழல் எண் 14 போன்ற சரியான பில்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பார்ப்பது மற்றும் தொலைநோக்கி மூலம் ஒரு வெள்ளைப் பலகையில் சூரியனின் படத்தைக் காண்பதே பாதுகாப்பானது. நிகழ்வை டி.எஸ்.எல்.ஆர் மூலம் படம்பிடிக்க விரும்புவோர் உங்களிடம் சூரிய கிரகண வடிகட்டி (solar eclipse filter) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் சூரியனின் கதிர்கள் உங்கள் சென்சாருக்குச் சேதம் விளைவிக்கும்.
இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். சில தினங்களுக்கு முன்புதான் ’புறநிழல் சந்திர கிரகணம்’ எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் இன்று நிகழப்போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
சூரியனை பூமிச் சுற்றி வரும் காலத்தை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறை பயன்படுத்தப்படுகிறது. இது அறிவியல்பூர்வமானது என வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights