Advertisment

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செங்கனூர் மற்றும் கோட்டயம் ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு மையங்கள் திறப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை மகர விளக்கு பூஜை

சபரிமலை மகர விளக்கு பூஜை

சபரிமலை மகர விளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் இரண்டு மாதங்களுக்கு சபரிமலைக்கு 40 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள்.

Advertisment

இந்த இரண்டு வருடங்கள் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியங்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது திருவனந்தபுரத்தில் இருக்கும் தெற்கு ரயில்வே அலுவலகம்.

அதில் செங்கனூர் மற்றும் கோட்டயம் பகுதிகளில் சபரிமலை செல்வதற்கான முன்பதிவு மற்றும் புக்கிங் கவுண்ட்டர்கள் கூடுதலாக திறக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே போல் பம்பை பகுதியில் கூடுதலாக பி.ஆர்.எஸ் கவுண்ட்டர்கள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க : தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஒரு பார்வை

சபரிமலை மகர விளக்கு பூஜை : கோட்டயம் & செங்கனூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

கோட்டயம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் தங்குவதற்கும், செங்கனூரில் 600 பேர் தங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் கூடுதலாக கேட்டரிங் ஸ்டால்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 220 ரயில்வே காவல் படையினர், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் இருந்து அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பெண் காவலர்கள்

அந்த படையினரில் பெண் காவலர்களும் அடங்குவர். ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 31 பெண் கான்ஸ்டபிள்கள் அடங்குவர்.

உதவி மையங்கள்

முன்னாள் ராணுவர வீரர்களும் இந்த பணியில் அமர்த்தபப்ட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செங்கனூர், கோட்டயம், எர்ணாக்குளம், திரிச்சூர், குருவாயூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,

செங்கனூர் மற்றும் கோட்டயம் ரயில் நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மையங்கள் திறக்கப்படும் என்றும் அந்த மையங்களில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பக்தர்களின் அவசர உதவிகளுக்கு 182 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.

Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment