Sri Bangla Sahib Gurudwara in Delhi prepares food for 1 lakh poor people amid coronavirus : ஊரடங்கு உத்தரவு, நாட்டில் இருக்கும் லட்சக் கணக்கான ஏழை மக்களை பாடாய் படுத்திவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆதரவற்றவர்கள், ஏழைகள், தினக்கூலிக்கு வேலைக்கு செலவர்கள், லோயர் மிடில் க்ளாஸ் குடும்பங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் வார்த்தைகளால் விளக்க முடியாத இன்னல்களை தினமும் சந்தித்து வருகின்றனர். உதவி வேண்டி ஆயிரம் பேர் நின்றாலும் உதவும் கரங்கள் ஒன்றோ இரண்டோ தான் இருக்கிறது.
மேலும் படிக்க : தொலை தூர பயணத்திற்கு ”ரயில் அடுக்கு” பாத்திரம்… முன்னபின்ன பாத்துருக்கீங்களா?
அப்படியான ஒன்றாகவே அமைந்துள்ளது டெல்லியில் இருக்கும் பங்க்ளா சாகிப் குருத்வாரா. இங்கும் கொரோனாவிற்கு முன்பும் கூட லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் அளவிற்கு மிகப் பெரிய குருத்வாரா. ஆனால் கொரோனா பரவல் காரணமாக குருத்வாராக்கள் மூடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ஏழை மக்களுக்கு தங்கள் உதவியை செய்ய விருப்பம் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க : கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை மாற்றம் – போராட்டத்தில் பச்சிளம் குழந்தை
நாள் ஒன்றுக்கு 1600 கிலோ உணவு பொருட்களை தயாரித்து டெல்லி அரசின் உதவி மூலம் ஏழைகளுக்கு கொடுத்து வருகிறது இந்த குருத்வாரா. டெல்லி அரசு இங்கிருந்து வாகனங்கள் மூலமாக உணவை பெற்று, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அளித்து வருகிறது. இது குறித்து குருத்வாரா நிர்வாகி கூறிய போது “குருவின் அருளால் உணவு பொருட்களுக்கு பஞ்சமின்றி குருத்வாரா இயங்கி வருகிறது. அதனால் நாங்கள் பற்றாக்குறை பற்றி கவலை கொள்ளாமல், ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறோம்” என்று கூறினார். குருத்வாராவில் 50 நபர்கள் ஒன்றாக இணைந்து மூன்று நேரத்திற்குமான உணவினை தயார் செய்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “