தொலை தூர பயணத்திற்கு ”ரயில் அடுக்கு” பாத்திரம்… முன்னபின்ன பாத்துருக்கீங்களா?

இது போன்ற பாத்திரத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. உங்கள் வீடுகளில் இது போன்று ஏதேனும் சுவாரசியமான பாத்திரம் இருக்கிறதா? 

By: May 22, 2020, 11:59:28 AM

Rail Adukku Pathiram Tamil Nadu Antique vessels for long travel :  முன்பெல்லாம் நம் வீட்டில் இருக்கும் தாத்தாக்கள், பாட்டிகள் காசி, ராமேஸ்வரம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். புனித தலங்களை கண்டு, தங்களின் இறுதி காலங்களை போக்கிக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் துணி மற்றும் தேவையான பொருட்களுடன் ரயில் ஏறிவிடுவது வழக்கம். ஆனால் செல்லும் இடமெல்லாம் ஹோட்டல் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

மேலும் படிக்க : கொரோனாவால் குறைந்த காற்று மாசு : 200 கி.மீ அப்பால் தெளிவாக காட்சி அளித்த எவரெஸ்ட்!

அதனால் தான், ரயில் அடுக்கு என்ற ஒன்றை அவர்கள் கண்டறிந்துள்ளனர். 14 அடுக்கு பாத்திரங்களை கொண்ட இந்த பாத்திரங்களை ஒன்றாக அடுக்கி, ஒரு பெரிய பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். எங்கே சென்றாலும், இந்த பாத்திரங்களை வைத்து, ஒரு வீட்டுக்கு தேவையான உணவை உடனே சமைத்துவிடலாம்.

இந்த வீடியோவில் வைக்கப்பட்டிருக்கும் ரயில் அடுக்கு பாத்திரத்தில் 14 அடுக்குகள் உள்ளது. காய்கறிகளை வைக்க இரண்டு அகலமான இரண்டு பாத்திரம், சாதம் வடிக்க ஒரு சிப்பல், காய்களை வதக்க இலுப்பை சட்டி, டவரா, தண்ணீர் குடிக்க மூன்று டம்ளர்கள், ஒரு செம்பு, 4 பாத்திரங்கள், மற்றும் ஒரு தவளைச்சட்டி அதில் உள்ளது. எங்கே சென்றாலும் இந்த ரயில் அடுக்கு பாத்திரம் இருந்தால் போதும் போல. தேவைகளுக்கு ஏற்றவாறு, ஆங்காங்கே வைத்து இந்த பாத்திரங்களில் சமைத்து உண்டுள்ளனர். இது போன்ற பாத்திரத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. உங்கள் வீடுகளில் இது போன்று ஏதேனும் சுவாரசியமான பாத்திரம் அல்லது பொருட்கள் இருந்தால் கீழே கமெண்ட்டில் பதிவிடவும்.

மேலும் படிக்க : கொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Rail adukku pathiram tamil nadu antique vessels for long travel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X