கலவரத்துக்கு நடுவில் சபரிமலை செல்ல முயன்ற இலங்கைப் பெண்… திருப்பி அனுப்பிய காவல் துறையினர்…

குழந்தைகள் மற்றும் கணவருடன் வந்த 46 வயதுமிக்க சசிகலா என்ற பெண்ணை திருப்பி அனுப்பியது காவல்துறை

By: January 4, 2019, 10:24:29 AM

Sri Lankan woman tries to enter Sabarimala : ஜனவரி 2ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.  இதனால் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பும் வன்முறைகளும் உருவாகின. நேற்று இந்து அமைப்பினருக்கும் சி.பி.எம் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் மோதல்களும் கலவரங்களும் உருவானதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : சபரிமலை விவகாரம் : தீர்ப்பிற்கு எதிராக கருத்து இருந்தால் தலைமை தந்திரி பொறுப்பில் இருந்து விலகுங்கள் – பினராயி

Sri Lankan woman tries to enter Sabarimala

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண், தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் சபரிமலை கோவிலுக்கு ஐயப்பனை தரிசிக்க விரும்புவதாக கூறி கோரிக்கை வைத்தார். பின்பு தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதல்களை கொடுத்துள்ளார். ஆனால் கேரளத்தில் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பெண் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மரக்குட்டம் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பினராயி விஜயன் அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். பின்னர் இந்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அம்மாநிலத்தில் ஏரளமான பொது சொத்துகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளது. 31 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sri lankan woman tries to enter sabarimala sent back by police

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X