அதானி-ஹிண்டன்பர்க் விவகார காலத்தில் காணப்பட்ட சந்தை ஏற்ற இறக்கங்களால் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க ஒழுங்குமுறை ஆட்சியில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் முன்மொழியப்பட்ட நிபுணர்கள் குழு மீதான மத்திய அரசின் பரிந்துரையை "சீல் செய்யப்பட்ட கவரில்" ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, முதலீட்டாளர்களின் நலன்களில் முழு வெளிப்படைத்தன்மையை பராமரிக்க விரும்புவதாகக் கூறியது.
இதையும் படியுங்கள்: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு; பினராயி விஜயன் அரசுக்கு புது சிக்கல்
"முழு வெளிப்படைத்தன்மையை நாங்கள் பராமரிக்க விரும்புவதால் உங்களது சீல் செய்யப்பட்ட கவர் பரிந்துரையை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்று பெஞ்ச் கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழுவை நியமிப்பது தொடர்பான உத்தரவையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. குழுவில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் அல்லது மனுதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை ஏற்கமாட்டோம், ஆனால் நீதிமன்றமே நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று பெஞ்ச் கூறியது.
திங்களன்று, "பங்கு கையாளுதலில் மோசடி" என்ற குற்றச்சாட்டுகள் குறித்த ஹிண்டன்பர்க் குழுமத்தின் அறிக்கையால் தூண்டப்பட்ட அதானி குழுமப் பங்குகளின் பங்கு விலை சரிவை அடுத்து, பங்குச் சந்தைக்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய நிபுணர்கள் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இருப்பினும், அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களைக் கேட்ட, உச்ச நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது, ஒழுங்குமுறை பொறிமுறையில் சாத்தியமான மேம்பாடுகளை பரிந்துரைக்க வல்லுநர்கள் குழுவை அமைக்க முடியுமா என்பது குறித்து "தீவிரமாக யோசிப்பதாக" கூறியது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தற்போதுள்ள செபி மற்றும் பிற ஏஜென்சிகள் அமைப்புகள், முழுமையாக அதிகாரம் பெற்றவை, நிர்வாக வாரியாக மட்டுமல்ல, நிலைமையைக் கவனித்துக் கொள்ளவும் அதிகாரமுடையவை... இருப்பினும், உரத்த சிந்தனையாக உங்கள் திருவருளால் விழுந்த ஆலோசனைக்கு பதிலளிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... ஒரு குழுவை அமைப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று கூறினார்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குறிப்பில், இந்திய சந்தை ஒழுங்குமுறை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) "ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கை வெளியீட்டிற்கு முந்தைய மற்றும் பிந்தைய சந்தை செயல்பாடுகள் மற்றும் குறுகிய விற்பனை தொடர்பானவை உட்பட அனைத்தையும் செபி (SEBI) விதிமுறைகளின் மீறல்களை அடையாளம் காண ஏற்கனவே விசாரித்து வருகிறோம்,” என்று கூறியது.
இதுவரை, வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் விஷால் திவாரி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயா தாக்கூர் மற்றும் செயற்பாட்டாளர் முகேஷ் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நான்கு பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.