தேர்தல் ஆணையர் அருண் கோயலின் நியமனத்தின் அசல் கோப்பை மத்திய அரசு அரசியல் சாசன பெஞ்ச் முன் வைத்த பிறகு அவரது பெயர் இறுதி செய்யப்பட்ட “மின்னல் வேகம்” குறித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.
கடந்த வாரம் தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட “பொறிமுறை” குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, “அவர்கள் கூறியது சரியென்றால், அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்றால், கோப்புகளைத் தாக்கல் செய்ய மத்திய அரசு பயப்பட வேண்டாம்” என்று கூறியது.
இதையும் படியுங்கள்: புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம்.. கோப்புகளை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுக்களை வியாழக்கிழமை (இன்று) விசாரித்தபோது, 24 மணி நேரத்தில் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் "நெருக்கடியான அவசரம்" உள்ளதா என மத்திய அரசிடம் கேட்டது.
அருண் கோயலின் நியமனம் தொடர்பான கோப்புக்கு "மின்னல் வேகத்தில்" ஒப்புதல் அளிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் கவனித்ததால், மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, நீதிமன்றத்திடம் இதுபோன்ற "கருத்துக்கள் கூறுவதை தவிர்க்குமாறு" கேட்டு, இந்த விஷயத்தை முழுமையாக ஆராயுமாறு கேட்டுக் கொண்டார்.
“இது என்ன மாதிரியான மதிப்பீடு? இருப்பினும், அருண் கோயலின் நற்சான்றிதழ்களின் தகுதியை நாங்கள் கேள்வி கேட்கவில்லை, ஆனால் செயல்முறையை நாங்கள் கேள்வி கேட்கிறோம், ”என்று பெஞ்ச் கூறியது.
பிரதமருக்கு பரிந்துரை செய்ய சட்ட அமைச்சர் நான்கு பெயர்களை எவ்வாறு பட்டியலிட்டார் என்று கேட்கப்பட்டதற்கு, இது DoPT ஆல் பராமரிக்கப்படும் தரவுத்தளத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil