Supreme court hears 140 petitions challenging citizenship law today
Supreme court hears 140 petitions challenging citizenship law today : பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு, மதரீதியான தாக்குதலுக்கு ஆளான சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள் அல்லாதோர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்ற ஒரு சட்ட மாற்றத்தை இந்திய குடியுரிமை சட்டத்தில் ஏற்படுத்தியது மத்திய அரசு. இந்த திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. மேலும் சில மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Advertisment
மேற்கூறிய நாடுகளில் வசிக்கும் புத்தமதம், சமண மதம், கிறித்துவம், ஃபார்சி, இந்துக்கள், மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தொடர்ந்து விலக்கி வைப்பதை காட்டுகிறது என்றும், இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் எதிர் தரப்பினர் குரல் தருகின்றனர்.
இது வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட சட்டம் என்றும், இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் ஆளுங்கட்சி தரப்பு பதில் அளித்துள்ளது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் அமைந்திருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ளது.
Advertisment
Advertisements
திமுக கட்சி, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், டி.எம்.சி. எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஹைத்ராபாத் எம்.பி. அசாசுதீன் ஓவய்ஸி என பலரும் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 140 மனுக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், சஞ்சீவ் கண்ணா என மூன்று பேர் கொண்ட அமர்வு இதனை விசாரணையை மேற்கொண்டனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் இந்திய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அறிவித்தது இன்றைய அமர்வு. இந்த மனுக்கள் மீது 4 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.ஏ.ஏவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.