Supreme court hears pleas against citizenship amendment act : நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆஃப்கான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் பாதிப்படைந்து இந்தியாவில் தஞ்சம் புகும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், மற்றும் சீக்கியர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டது.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இது இந்தியாவில் பிரிவினை வாதத்தையும், மத வாதத்தையும் தூண்டும் என்றும், தொடர்ந்து சிறுபான்மையினரை குறிவைத்து மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பலரும் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை உச்ச நீதிமன்றத்தில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெய்ராம் ரமேஷ், மஹூவா மொய்த்ரா, அசாசுதீன் ஓவைஸி ஆகியோரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அசோம் கான பரிசாத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அசாம் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோரும் வழக்கு பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தின், இந்த ஆண்டின், கடைசி வேலை நாளாகும். இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை குளிர்கால விடுமுறை ஆகும். அதனால் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி பாப்டே, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
மனுக்களில் குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விடுத்துவிட்டு இதர மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. இது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் என்றும், இது என்.ஆர்.சியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இது இந்திய அரசியல் சாசனம் வழியுறுத்தும் மதசார்பற்ற, சரிசமமான என்ற பதங்களுக்கு எதிராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஓவைசியின் மனுவில் சட்டத்திற்கு புறம்பாக வரும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் என மற்றவர்களுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை வழங்குவது சரியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க : நாடு தழுவிய மாணவர்கள் போராட்டம் : எச்சரிக்கை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி
உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து ஜனவரி 2வது வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.