Tamil Nadu news today live updates : கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பெற்றுவார் என்று இந்தியாவே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்று பெரும்பான்மையை கோரி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால் 15 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று அமளி ஏற்பட இரண்டு முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் நேற்றிரவு அவையிலேயே உணவு உண்டு படுத்தும் உறங்கிவிட்டனர். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
Assam Flood
மெட்ரோ நகரங்களில் ஏற்படும் வெள்ளங்களுக்கு மட்டுமே உடனடி நிவாரணம், துரித நடவடிக்கைகள் எல்லாம் தீவிரப்படுத்தப்படும். ஆனால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதால், யாருடைய கரிசனமும் கவனமும் அவர்களுக்கு தேவையில்லை என்று நினைக்கும் பழக்கம் வெகு காலமாக இருந்து வருகின்றது. தற்போது அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். கசிரங்கா பூங்காவில் உள்ள காண்டாமிருகங்கள் உட்பட பல்வேறு வன உயிரினங்கள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழிந்த அவலமும் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், நட்சத்திரங்கள் ட்விட்டரில் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
My heartfelt solidarity with our brothers and sisters in Assam, Bihar, UP, Tripura and Mizoram who are being devastated by floods. #AssamFloods
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) 18 July 2019
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, rainfall, assembly updates, government announcements, and more : தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
Saravana Bhavan Rajagopal
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஆஜரான சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நேற்று தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் வயது 72 ஆகும். தன்னுடைய பணியாளர் ஒருவரின் மனைவியை மணந்த கொள்ள, பணியாளரையே கடத்தில் கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஜூலை 9ம் தேதி ஸ்ட்ரெச்சரில் வந்தபடியே ஆஜரானார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்… மரணப்படுக்கை வரை இழுத்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கு!
வைகோ மீதான தண்டனை நிறுத்தி வைப்பு
வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி ஜூலை 5ம் தேதி தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு நேற்று (18/09/2019) நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி வைகோ விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்
இன்றைய தினம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தலைமையில் அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்றைய சட்டப்பேரவை விவாதத்தில், குட்கா ஊழல் வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது மாரடைப்பால் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை அத்தி வரதரை தரிசிக்க சென்றவர்களின் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு பின்பு இன்று அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தங்களது முதலாளிக்கு இறுது மரியாதை செலுத்த சரவணபவன் ஊழியர்கள் ராஜகோபால் இல்லத்தில் குவிந்து வருகின்றனர்.
இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள வேலூர் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, சுயேட்சை என மொத்தம் 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைப்பெற்றது. இதில் 19 மனுக்களை தள்ளுபடி செய்து 31 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பி இருந்தது. அதன்பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பபட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு அந்த நிறுவனங்கள் வழங்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 855 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீட்டுள்ளது.
12ம் வகுப்பு – மார்ச் 2ல் தேர்வு தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஏப்.24 ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு – மார்ச் 17ம் தேதி தேர்வு தொடங்கி ஏப்.9ம் தேதி முடிவடையும். மே 4 ஆம்தேதி முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கியுள்ள ஒரு குற்றவாளிக்கு யாருமே ஜாமின் தராதபோது, திமுகவினர்தான் ஜாமின் கொடுத்தார்கள் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு குறித்து தகவல் தெரிவித்ததாக தகவல் தெரிவித்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை ஜாமீனில் வெளிவந்ததை முதல்வர் சாடி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தப்பட்ட நிலையில் திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த வேலூர் மக்களவை தேர்தலின் போது ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏ.சி. சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஏ.சி.சண்முகம் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.
சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான பழங்குடி இன மக்களின் குடும்பத்தினை காண்பதற்காக நாராயண்பூர் சென்ற ப்ரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தேர்தலுக்கு பிறகு உ.பி. செல்வது இதுவே முதல்முறையாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், 9 மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல்.
தேசிய வெளியேறுதல் தேர்வு (NEXT) குறித்து ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு விஜயபாஸ்கர் பதில் தரும் போது மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும், மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் பேச்சு.
இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூராப்பாவிற்கு தான் வாய்ப்பு முதலில் வழங்கப்பட்டது. அதை அப்போது பயன்படுத்தாமல், நேரம் பார்த்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் அமைதியாக உள்ளார் என்று கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி பேச்சு. வெளிநாடு சென்று வந்த நேரமாக பார்த்து இங்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துவிட்டன. தரம்சிங் ஆட்சியின் போது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்து நான் இப்போது வருந்துகிறேன் என்றும் அவர் பேச்சு.
காஞ்சிபுரம் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவத்தில், இன்று முதல் மூலவரை தரிசிக்க இயலாது என்றும் அதிவரதரை வணங்கிய பின்னர் அனைவரும் நேரடியாக மேற்கு கோபுரம் வழியாக வளாகத்திலிருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஐபி தரிசனம் மாலை 6 மணிக்குள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்லைன் டிக்கெட் (ரூ .300) பெற்றவர்களுக்கு ஸ்பீட் தரிசனம் இருக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 நபர்கள் மட்டுமே இம்முறையில் தரிசனம் மேற்கொள்ள இயலும்.
ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 296 அதிகரித்து தற்போது ரூ.26,952க்கு விற்பனையாகி வருகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பினை இன்றுக்குள் நடத்த வேண்டும் என கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் லாலா நேற்று முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதினார். இந்த வலியுறுத்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மனு அளித்துள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது, சபாநாயகருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது என்று மனுவில் குமாரசாமி தகவல்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனநாயக ரீதியாக கருத்து சொல்ல நடிகர் சூர்யாவிற்கு கருத்து உண்டு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். எந்த வழியிலும் தமிழகத்தில் இந்தியை கொண்டுவரமாட்டோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் திமுக மொழியை வைத்து அரசியல் செய்கிறது என்றும் கூறியுள்ளார்.
புதுவையின் அரிக்கமேட்டில் அகழ்வாராய்ச்சிகளை மீண்டும் தொல்லியல் ஆராச்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
வருகின்ற 5ம் தேதி வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தது, அதிமுக.
வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்
கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி
அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்
ஆம்பூர்- கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியாத்தம் – வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி
அசாம் மக்களின் துயர் நீக்க விரும்பும் மக்கள் தங்களின் நிதியை இந்த கணக்கிற்கு அனுப்பி வையுங்கள்…
ஜூலை 17ம் தேதி நிலவரப்படி, 29 மாவட்டங்களில் உள்ள 4626 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 57,51,938 பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 28 பேர் இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 427 நிவாரண முகாம்கள் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அசாமில் தற்போது பருவமழை கொட்டி வருகின்றது. நான்கு நாட்களுக்கும் மேலாக அங்கு வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். க்ரிக்கெட் வீரர்கள் தங்களின் வருத்தங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
ஹர்பஜன் சிங் ட்வீட்