Advertisment

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்ட அனுமதி; கேரளாவுக்கு அடிக்கிறது ஜாக்பாட்

தமிழ்நாட்டின் அதிக வருவாய் தரும் இருப்புபாதை உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்க இதுவரை எந்த ஒரு திட்டமும் தெற்கு ரயில்வேயிடம் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்ட அனுமதி; கேரளாவுக்கு அடிக்கிறது ஜாக்பாட்

த. வளவன்

Advertisment

தமிழ்நாட்டை விட கேரளா ரயில்வே துறையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் உள்ள திருவனந்தபுரம் முதல் மங்களூர் வரை உள்ள 644.44 கி.மீ தூரம் உள்ள இருப்பு பாதை வேகத்தை மணிக்கு 160 கி.மீ வேகத்தில் அதிகரிப்பதற்காக இறுதி இட ஆய்வுக்கு 2023-24 பட்ஜெட்டில் 11 கோடியே 17 லட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் பட்ஜெட்க்கு முன்பு கடந்த ஆண்டு திருவனந்தபுரம் - மங்களூரு பிரிவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் வழியாக திருவனந்தபுரம் - மங்களூரு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை மணிக்கு 130ல் இருந்து 160 கி.மீ ஆக அதிகரிக்க, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இறுதி அறிக்கை 31.12.2023 க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை தவிர்த்து இதுபோன்ற எந்த ஒரு திட்ட ஆய்வு, பற்றி எந்த ஒரு அறிவிப்பும்  இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு; பினராயி விஜயன் அரசுக்கு புது சிக்கல்

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் மங்களூர் வரை இருவழி பாதை பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்து இந்த பாதை முழுவதும் மூன்றாவது பாதை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏர்ணாகுளம் - ஷொர்ணூர் வழிதடத்தில் மூன்றாவது பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி கேரளா சென்றுள்ளது. திருவனந்தபுரம் - காயங்குளம் வரை உள்ள பாதை 1990களில் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. கேரளாவில் அவர்கள் இருவழி பாதை மாற்றும் போது நாம் அந்த காலகட்டங்களில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி - மதுரை மீட்டர் கேஜ் பாதை பாதை அகல பாதையாக மாற்றம் செய்தோம். இதைப்போல் திருவனந்தபுரம் - எர்ணாகுளம் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் போது சென்னை – விழுப்புரம் மின்மயமாக்கல் பணிகளை தொடங்கி செய்து வந்தோம்.  

இதைப்போல் கேரளாவில் 2014-ம் ஆண்டே மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு விட்டது. மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் இதுவரை மெமு ரயில்கள் வரமுடியவில்லை. இவ்வாறு புறநகர் பாதை திட்டம், மூன்றாவது இருப்பு பாதை, சிக்னல் மேம்பாடு, என அடுக்கிக்கொண்டே போகலாம் தற்போது ரயிலின் வேகத்தை மணிக்கு 160 ஆக மாற்றும் திட்டம், திருவனந்தபுரம் - காசர்கோடு அதிவேக புல்லட் ரயில் போன்ற திட்டங்கள் அவர்கள் கைவசம் உள்ளன. நம்மிடம் இது போன்ற ஒரு திட்டமும் கைவசம் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி ஆகும்.

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி புறக்கணிப்பு:

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் - கன்னியாகுமரி பாதையை இந்த திட்டத்தில் இணைத்து கன்னியாகுமரி – மங்களுர் அதிவேக ரயில் இயக்கும் வகையில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லதக்க டிராக்குகள் மாற்றியமைக்க திட்டத்தை வகுத்திருக்கலாம். ஆனால் தெற்கு ரயில்வே அதிகாரிகள்  கன்னியாகுமரி – திருவனந்தபுரம் பாதையை இந்த திட்டத்தில் இணைக்க வில்லை. இது தமிழ்நாட்டில் வருகின்ற காரணத்தால் இந்த பகுதியை இந்த திட்டத்தில் இணைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இதற்கும் முன்பும் இவ்வாறுதான் பலமுறை நடந்து வந்துள்ளது. திருவனந்தபுரம் - எர்ணாகுளம் மின்மயமாக்கல் திட்டம் செயல்படுத்தும் போது இவ்வாறு திருவனந்தபுரம் - கன்னியாகுமரி புறக்கணிப்பு செய்யப்பட்டது. திருவனந்தபுரம் - காயங்குளம் இருவழி பாதை திட்டத்தின் போதும் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தமிழ்நாடு பகுதி புறக்கணிக்கப்பட்டது. இது இப்போதும் தொடர்கிறது. இதற்கும் திருவனந்தபுரம் -கன்னியாகுமரி பாதை இருவழிபாதையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் போதே அத்துடன் இணைத்து எளிதாக குறைந்த செலவில் ரயில் பாதையின் வேகத்தை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்த முடியும்.

திருவனந்தபுரத்திலிருந்து அதிவேக ரயில்களான ராஜதானி, ஜனசதாப்தி, ஹம்சாபர், கரீப்ரதம் போன்ற ரயில்கள் அதிவேகத்தில் இயங்கப்படும் ரயில்கள் ஆகும். இது போன்ற ரயில்கள் தென்மாவட்டங்களில் இல்லாத காரணத்தால் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க இருப்பு பாதையை பலப்படுத்தும் திட்டம் சென்னை - கன்னியாகுமரிக்கு வராமல் போய்விட்டது ஏன்று கூட எடுத்து கொள்ளலாம்.

சென்னை – கன்னியாகுமரி

ரயில்வே துறையில் எப்போதும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவது புதிது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டின் முக்கிய அதிக வருவாய் தரும் இருப்புபாதை உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்க இதுவரை எந்த ஒரு திட்டமும் தெற்கு ரயில்வேயிடம் இல்லை. கேரளாவில் திருவனந்தபுரம் முதல் மங்களூர் வரை இந்த திட்டம் செயல்படுத்தும் போது தமிழ்நாட்டில் சென்னை கன்னியாகுமரி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  

தற்போதைய வேகம்

சென்னை – கோவை – 110

சென்னை – மதுரை -110

நாகர்கோவில் - திருநெல்வேலி – 110

160 கி.மீ வேகத்தில் இயக்க தேவையான பணிகள்

• பழைய ரயில்வே டிராக் எடுத்து விட்டு புதிதாக மாற்றம் செய்தல்

• முழுமையான பாதை புதுப்பித்தல் பணி - தேவைப்படும் இடங்களில் 60 கிலோ ரயில் தண்டவாள பாதையை மாற்றுவது

• ஸ்லீப்பர் கட்டைகள் எண்ணிக்கையை அதிகரித்தல்

• பாலங்களை வலுப்படுத்துதல்

• தற்போது உள்ள வளைவுகளை டிகிரியை அதிகப்படுத்தி சாத்தியமான இடங்களில் வளைவுகளை எளிதாக்குதல்

• பொதுமக்கள், கால்நடைகள் அதிகமாக கிராசிங் உள்ள இடங்களில் தடுப்பு அல்லது சுவர்கள் கட்டுதல்.

• தானியங்கி சிக்னலிங்  வழங்குவதன் மூலம் சமிக்ஞை அமைப்பை மேம்படுத்துதல்

இவ்வாறு இந்த பணிகளை செய்தால் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment