குழந்தைகளும் பசியும் பொருட்டே இல்லை; தமிழர்களை நள்ளிரவில் எல்லையில் இறக்கிவிட்ட கேரள அரசு

அவர்களிடம் ஈ-பாஸ் தேவை என்று கூறிய தமிழக அதிகாரிகள், அவர்களை தமிழகத்திற்குள் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். 

Tamils returned from Dubai struck in Tamil Nadu Kerala Border
Tamils returned from Dubai struck in Tamil Nadu Kerala Border

Tamils returned from Dubai struck in Tamil Nadu Kerala Border : துபாய் நாட்டில் இருந்து விமானம் மூலம் கேரளா வந்தடைந்தனர் 25 தமிழர்கள். அவர்களை பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைப்பதற்கு பதிலாக, தமிழக, கேரள எல்லையில் இறக்கிவிட்டுள்ளது கேரள அரசு. நள்ளிரவில் எல்லையில் அம்மாநில அரசு விட்டுச்சென்றவிட்ட நிலையில், அவர்களிடம் ஈ-பாஸ் இல்லாத காரணாத்தால் தமிழக அதிகாரிகளும் தமிழகத்திற்குள் வர அவர்களை அனுமதிக்கவில்லை. உணவின்றி, குழந்தைகளுடன் எல்லையில் தவித்து வருகின்றனர் அம்மக்கள்.

மேலும் படிக்க : கேரளாவில் கொரோனா விழிப்புணர்வும் டாப் ஹிட் தான்; தமிழக ஆட்டோக்கள் சவாலுக்கு ரெடியா?

விசா காலம் முடிந்த பின்னரும் கொரோனா ஊரடங்கு காரணமாக துபாயில் முடங்கியிருந்த இந்தியர்களை அழைத்துவர தூதரகம் முடிவு செய்திருந்தது. துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் முன் பதிவு செய்த இவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர். நேற்று மதியம் 3:20 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்தது. அந்த விமானத்தில் 25க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பயணித்துள்ளனர்.

மேலும் படிக்க : அனைத்து ”மொக்கை” முகநூல் பதிவுகளுக்கும் குட்-பாய் சொல்லும் காலம் வந்திருச்சு… பேஸ்புக் புது அப்டேட்

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை குவாரண்டைன் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையிலும், தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் கேரளாவில் பாதுகாக்க முடியாது என்று கூறி தமிழக எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு நள்ளிரவில் அவர்களை இறக்கிவிட்டு சென்றுவிட்டது. அவர்கள் தமிழகத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் அவர்களிடம் ஈ-பாஸ் தேவை என்று கூறிய தமிழக அதிகாரிகள், அவர்களை தமிழகத்திற்குள் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். கையில் குழந்தைகளுடன், உணவுக்கு வழியின்றி தவித்து வரும் அவர்களை உடனே பரிசோதனை செய்து தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamils returned from dubai struck in tamil nadu kerala border

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com