Advertisment

அனைத்து ”மொக்கை” முகநூல் பதிவுகளுக்கும் குட்-பாய் சொல்லும் காலம் வந்திருச்சு... பேஸ்புக் புது அப்டேட்

சில ஆண்டுகள் கழித்து அவற்றையெல்லாம் காணும் போது நமக்கே சிரிப்பாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Facebook’s Manage Activity tab helps to delete all your awkward posts and photos

Facebook’s Manage Activity tab helps to delete all your awkward posts and photos

Facebook’s Manage Activity tab helps to delete all your awkward posts and photos : நாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பக்கத்தில் எதில் பிஸியாக இருக்கின்றோமோ இல்லையோ, இந்த முகநூலில் அவ்வளவு பிஸியாக இருந்திருக்கின்றோம். இருக்கின்றோம். நம்முடைய புகைப்படங்களை பதிவேற்றுவது முதற்கொண்டு, ஊர்வம்பு, சண்டைகள், தல-தளபதி போர்கள் என அனைத்தையும் பதிவு செய்து வைத்திருப்போம்.

Advertisment

ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவற்றையெல்லாம் காணும் போது நமக்கே சிரிப்பாக இருக்கும். அல்லது, இதற்காகவா இவ்வளவு மெனக்கெட்டோம் என்ற ஒரு அயர்ச்சி உருவாகும். ஒவ்வொரு புகைப்படமாக, போஸ்டாக பதிவு டெலிட் செய்ய விரும்பினால் வருடக்கணக்காகிவிடும். ஏன் என்றால் நம்முடைய எழுத்துகளும், அப்டேட்களும் அப்படி.

மேலும் படிக்க : அனைத்து ”மொக்கை” முகநூல் பதிவுகளுக்கும் குட்-பாய் சொல்லும் காலம் வந்திருச்சு… பேஸ்புக் புது அப்டேட்

இனிமேல் இந்த கவலையில் இருந்து பயனர்கள் விடுபடலாம். அதற்காக தான் பேஸ்புக் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் மேனேஜ் அக்டிவிட்டி (Manage Activity) என்ற டேப். இதில் இரண்டு ஆப்சன்கள் உள்ளது ஒன்று ஆர்க்கைவ் மற்றொன்று ட்ராஷ். உங்களின் அந்த பழைய ”மொக்கை” பதிவுகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் அதனை ஆர்க்கைவ்வுக்கு கொண்டு செல்லலாம்.

மேலும் படிக்க : கேரளாவில் கொரோனா விழிப்புணர்வும் டாப் ஹிட் தான்; தமிழக ஆட்டோக்கள் சவாலுக்கு ரெடியா?

அந்த பதிவுகளை நீங்களே பார்க்க வேண்டாம் என்று விரும்பினால் யோசிக்காமல் டெலிட் செய்துவிடலாம். அய்யோ எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டோமேன்னு நீங்க வருந்த கூடாதுன்னு 30 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறார் மார்க்.

வேண்டும் என்றால் ரிஸ்டோர் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் கவலையில்லாமல் புதிய போஸ்ட்டுகளை பதிவு செய்ய ஆரம்பித்துவிடுங்கள்.  முகநூல் ஆப்பில் இந்த ஃபீச்சர் மிகவிரைவில் வெளியாக உள்ளது என்று முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த பேஸ்புக் மேனேஜ் ஆக்டிவிட்டி எப்படி செயல்படும் என்ற டெமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது முகநூல். அதனை காண இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment