தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை : மகளையும் மருமகனையும் ஓட ஓட வெட்டிய தந்தை

எஸ்.ஆர் நகர் காவல் துறையில் இன்று காலை சரணடைந்தார் அப்பெண்ணின் தந்தை

தெலுங்கானா ஆணவக் கொலை : தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 4 நாட்களுக்கு முன்பு பெற்றவர்களின் எதிர்ப்புகளையும் மீறி மாதவி என்ற பெண் சந்தீப் என்பவரை மணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தகப்பனார் மாதவி மற்றும் அவரது கணவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். அந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு, சந்தீப்பிற்கு மாதவியின் தந்தை அலைபேசியில் அழைத்து தனக்கு தன் மகளை உடனடியாக காண வேண்டும். அவளை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து எஸ்.ஆர். நகர் ஆட்டோமொபைல் ஷாப் அருகே தன்னுடைய மனைவியை அழைத்து வந்துள்ளார் சந்தீப். பின்னால் இருந்து வந்த மாதவியின் தந்தை இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் அத்தம்பதியினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சந்தீப் அபாய கட்டத்தினை கடந்துவிட்டார். ஆனால் மாதவிக்கு ஒரு கையும் ஒரு காதும் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது.  இன்னும் அபாய கட்டத்தில் தான் அவர் இருக்கிறார்.

தலைமறைவாக இருந்த மாதவியின் தந்தை மனோகர் ஆச்சாரி எஸ். ஆர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்பு இருவரும் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக ஒரு தேர்வு மையத்தில் சந்தித்துள்ளனர். அவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. மிக சமீபத்தில் தங்களின் கல்லூரி படிப்பினை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா ஆணவக் கொலை

கடந்த வாரம் பிரனய் என்பவர் தன் மனைவி அம்ருதாவுடன் மருத்துவமனைக்கு சென்று வந்த போது அம்ருதாவின் தந்தை, பிரனயை ஆள் வைத்துக் கொலை செய்தார். அந்த சிசிடிவி பதிவுகளும் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அதில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்திற்குரியது. மேலும் படிக்க : ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி மருமகனைக் கொன்ற தந்தை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close