Advertisment

தெலுங்கானா அரசியலில் தீவிரம் காட்டும் ஜெகனின் சகோதரி; எதிர்க்கும் டி.ஆர்.எஸ்

கடந்த ஆண்டு முதல், ஒய்.எஸ்.சர்மிளா தனது கட்சியை நிறுவுவதற்காக தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்துகிறார். கே.சி.ஆர் தலைமையிலான கட்சி அவரைப் புறக்கணித்தது ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது

author-image
WebDesk
New Update
தெலுங்கானா அரசியலில் தீவிரம் காட்டும் ஜெகனின் சகோதரி; எதிர்க்கும் டி.ஆர்.எஸ்

Sreenivas Janyala

Advertisment

அவரது சகோதரர் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, அவருக்குக் கீழ் ஆந்திர அரசியலில் இடம் கிடைக்காததால், ஒய்.எஸ். ஷர்மிளா தனது அரசியல் வாழ்க்கையை நிறுவுவதற்காக கடந்த ஆண்டு அண்டை மாநிலமான தெலுங்கானாவுக்குச் சென்றார்.

கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை (YSRTP) நிறுவிய ஷர்மிளா திங்களன்று வாரங்கல் மாவட்டத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தொண்டர்கள் அவரது கான்வாய் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டையைச் சேர்ந்த டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ பி சுதர்சன் ரெட்டி மீது அவர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் அவரது கைதுக்கு தூண்டுதலாக இருந்தது. செவ்வாயன்று, அவர் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் அலுவலகம் மற்றும் வசிப்பிடமான பிரகதி பவன் நோக்கி பலமுறை செல்ல முயன்ற நிலையில், இரண்டாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். YSRTP தலைவரான ஷர்மிளா காரில் அமர்ந்திருந்தபோதும், ஷர்மிளாவின் காரை போலீசார் இழுத்துச் சென்றனர். பல YSRTP தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? மோடியை தாக்கிய கார்கே

48 வயதான ஷர்மிளா ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகள் ஆவார். அவர் ஜூலை 8, 2021 அன்று YSRTP ஐ நிறுவினார், மேலும் தெலுங்கானா அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சிக்கு அவரது சகோதரர் தலைமை தாங்கியதால், தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி), ஜன சேனா கட்சி (ஜே.எஸ்.பி), பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்திராவில் தனக்கென எந்த அரசியல் இடத்தையும் காணாததால், ஷர்மிளா தெலுங்கானா அரசியலுக்கு மாறினார்.

அக்டோபர் 20, 2021 அன்று, தெலுங்கானாவின் 33 மாவட்டங்கள் முழுவதும் பாத யாத்திரையான பிரஜா பிரஸ்தானம் யாத்திரையைத் தொடங்கினார். ஆந்திராவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவரது சகோதரரும் வாக்காளர்களை இணைக்க மாநிலம் தழுவிய பாதயாத்திரையை மேற்கொண்டார். ஷர்மிளா தெலுங்கானா வழியாக டஜன் கணக்கான தொண்டர்களுடன் அணிவகுத்து வருகிறார், அவர்களில் பெரும்பாலோர் முன்னாள் ஒய்.எஸ்.ஆர் விசுவாசிகள். ஷர்மிளா கிராம மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை விவாதித்து வருகிறார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்து மூலம் ஷர்மிளா பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகிறார். அவரது பாதயாத்திரையின் 223வது நாளான திங்கள்கிழமை இந்த பஸ்சையே டி.ஆர்.எஸ் தொண்டர்கள் கொளுத்த முயன்றனர்.

ஒய்.எஸ்.ஆர்.டி.பி செய்தித் தொடர்பாளர் கே.ராகவ ரெட்டி கூறுகையில், பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டங்களின் போதும் மக்களுடன் உரையாடும் போதும், ​​மக்கள் நலத்திட்டங்கள் விநியோகத்தில் பாகுபாடு காட்டுதல், குடிமை உள்கட்டமைப்பு பற்றாக்குறை, ஆளும் கட்சியின் ஊழல், அரசு உதவி அல்லது ஆரோக்கியஸ்ரீ சுகாதாரத் திட்டத்தின் கீழ் பயன் பெறாத பயனாளிகள் அல்லது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணத் திருப்பிச் செலுத்துதல் போன்ற பிரச்சனைகள் குறித்து ஷர்மிளா பெரும்பாலும் மக்களிடம் விவாதித்தார், என்று கூறினார்.

சில இடங்களில், அவரது வெளிப்படையான பேச்சு, டி.ஆர்.எஸ் தொண்டர்களை கோபமுறச் செய்துள்ளது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கோவிட்-19 நெருக்கடியை தவறாக கையாண்டதாக, கடந்த ஆண்டில் பலமுறை ஷர்மிளா குற்றம் சாட்டினார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் இதுவரை தெலுங்கானாவில் ஷர்மிளாவின் அரசியல் அபிலாஷைகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, அவரை புதியவர் என்றும், அவரது அரசியல் பிரவேசம் ஆந்திராவில் அவருக்கு மறுக்கப்பட்ட சாகசம் என்றும் நிராகரித்துள்ளனர்.

பாதயாத்திரைகளுக்கு அந்நியர் அல்ல

மே 2019 இல் ஆந்திரப் பிரதேசத்தில் அவரது சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமோக வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வெளியில் தெரியாமல் இருந்த 48 வயதான ஷர்மிளா கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் மீண்டும் தோன்றினார். அவர் தனது தந்தையின் பிறந்தநாளில் தனது கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். ஒய்.எஸ்.ஆரின் ஆட்சி மாதிரியைக் குறிப்பிட்டு, “ராஜண்ண ராஜ்ஜியத்தை” மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறினார்.

ஷர்மிளா இன்னும் "ஆந்திராவில் இருந்து வந்த வெளியூர்காரர்" என்று பார்க்கப்படவில்லை, ஆதாரங்களின்படி, அவரது ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் YSRCP இன் முன்னாள் உறுப்பினர்கள். அவர் தனது தாயார் ஒய்.எஸ்.விஜய லட்சுமியின் ஆதரவையும் பெற்றுள்ளார். ஜூலை மாதம், YSRCP தனது வாழ்நாள் தலைவராக ஜெகனை அபிஷேகம் செய்ய தயாராகிவிட்ட நிலையில், கட்சியின் இணை நிறுவனரான விஜய லட்சுமி, YSRCP இன் கௌரவத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதவி விலகியதும், விஜய லட்சுமி தனது மகளுக்கு உதவ தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக கூறினார்.

இதற்கிடையில், ஷர்மிளா கடுமையான பாத யாத்திரைகளுக்குப் புதியவர் அல்ல. ஜூன் 2012 இல், சி.பி.ஐ தனது சகோதரரை க்விட் புரோகோ வழக்கில் கைது செய்த பிறகு, இடைத்தேர்தலுக்கு தனது சகோதரரின் சார்பாக அவர் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அந்த அக்டோபரில், கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான இடுபுலபாயவிலிருந்து ஸ்ரீகாகுளத்தில் உள்ள இச்சாச்சாபுரம் வரை கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். 2019 தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆந்திரப் பிரதேசம் வழியாக சுமார் 1,500 கிமீ தூரம் வரை ஷர்மிளா பதினொரு நாள் பேருந்து யாத்திரை மேற்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Telangana Andhra Pradesh Jagan Mohan Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment