குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்தோ, என்பிஆர் குறித்தோ நாட்டில் யாரும் கவலைப்படத் தேவையில்லை, யாரும் நாட்டைவிட்டு அனுப்பப்படமாட்டார்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன், கூட்டணி அமைத்து சிவசேனா போட்டியிட்டது. ஆனால், முதல்வர் பதவியை பகி்ர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட, கூட்டணியை விட்டு சிவசேனா வெளியேறியது. இதையடுத்து, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த சிவசேனா மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை அமைத்தது.
உடற்பயிற்சி செய்தால் இலவச ரயில் டிக்கெட் - மத்திய அரசின் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு (வீடியோ)
முதல்வரானபின் இதுவரை பிரதமர் மோடியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக உத்தவ் தாக்கரேயும், அவரின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேயும் இன்று சந்தித்துப் பேசினார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a30-3-300x165.jpg)
இந்த சந்திப்புக்குப்பின் முதல்வர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " மகாராஷ்டிரா தொடர்பான பிரச்சினைகள் குறித்து நான் பிரதமருடன் கலந்துரையாடினேன். CAA, NPR மற்றும் NRC ஆகியவற்றையும் பிரதமருடன் விவாதித்தேன். CAA பற்றி யாரும் பயப்பட தேவையில்லை. NPR யாரையும் நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதில்லை.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் எந்த விதமான உரசலும், விரிசலும் இல்லை. முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மகாராஷ்டிரா வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், நிதிகளையும் வழங்குவதாகப் பிரதமர் மோடி" உறுதியளித்துள்ளார் என்றார்.
அதேபோல், டெல்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்து பேசினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a31-3-300x144.jpg)
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியையும் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் உடனிருந்தார்.
நமஸ்தே டிரம்ப்: அமெரிக்க அதிபரை வரவேற்க தயாராகும் ஆக்ரா, அகமதாபாத்; புகைப்படங்கள்
குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரபேட்டையில் இன்றும் எட்டாவது நாளாக போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.