அபிநந்தன் வர்த்தமான் குடும்பத்தினர் நன்றி : புல்வாமா தாக்குதலிற்கு பதிலடி தருவதற்காக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மண்ணில் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் கொண்டு தீவிரவாத முகாம்களை அழித்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இரண்டு விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது.
இதில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதே நேரத்தில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைய அதனை சுட்டு வீழ்த்தினர் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள். அதில் இருந்து பாராசூட்டில் குதித்த விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் தமிழகத்தை சேர்ந்த வீரர் என்பது தெரியவந்தது.
அபிநந்தன் வர்த்தமான் குடும்பத்தினர் நன்றி
அவருடைய தந்தை சிம்ஹகுட்டி வர்த்தமான் இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷெலாக பணியாற்றி வந்தார். அபி நந்தன் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது என் மகன் உண்மையான வீரன் என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இக்கட்டாண தருணத்தில் உடன் இருந்து ஆறுதல் அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் கூறியுள்ளார் அவர்.
அபிநந்தன் பாகிஸ்தானில் கைதானது முதல் அவருடைய வீட்டில் ஆறுதல் சொல்ல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் வர்த்தமான் இன்று விடுதலை செய்யப்படுவதாக இம்ரான் கான் அறிவித்துள்ளதை தொடர்ந்து அபி நந்தனின் குடும்பத்தினர் அபியை அழைத்து வர வாகா எல்லை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இன்று தாயகம் திரும்புகிறார் அபிநந்தன் வர்த்தமான்