scorecardresearch

ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி; உ.பி., முழுவதும் 10000 கூட்டங்களை நடத்த திட்டம்

தேசியவாதத்தை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி கட்சி; உ.பி., முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றி, 10000 கூட்டங்களை நடத்த திட்டம்

ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி; உ.பி., முழுவதும் 10000 கூட்டங்களை நடத்த திட்டம்

Sourav Roy Barman , Lalmani Verma

Their shakha vs our shakha: AAP to take rashtrawad battle against RSS to maidans, mohallas in UP: மூவர்ணக் கொடியின் கீழ், பணவீக்கம் முதல் வேலையின்மை வரையிலான தலைப்புகளில் ஆர்வமுள்ள விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கு முன், ஆண்களும் பெண்களும் கூடி, அரசியலமைப்பின் முன்னுரையை உரக்கப் படிப்பார்கள் மற்றும் சுதந்திர இயக்க நிகழ்வுகளின் கதைகளை விவரிப்பார்கள்.

வருகின்ற ஜூலையில், இதுபோன்ற காட்சிகள் உத்தரபிரதேசத்தின் கிராம மைதானங்கள் மற்றும் நகரச் சதுக்கங்களில் இடம்பெறக்கூடும். நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில், ஆம் ஆத்மி கட்சி “திரங்கா ஷகாஸ்” திட்டத்தைத் திட்டமிடுகிறது, இது பாஜகவின் தேசியவாத உந்துதலை எதிர்ப்பதற்கும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முயற்சி என்று அக்கட்சி கூறுகிறது.

“உண்மையான ராஷ்டிரவாதத்தை (தேசியம்)” மையமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களின் பெரிய கேன்வாஸுக்கும் திரங்கா யாத்ரா திட்டம் பொருந்துகிறது என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகிறார்கள். திரங்கா யாத்ரா மூலம் டெல்லி முழுவதும் உயர் கொடிகம்பங்களில் மூவர்ண கொடிகளை நிறுவுதல், பள்ளிகளில் தேசபக்தி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளை எழுப்புதல் போன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி கட்சி செய்ய உள்ளது.

திரங்கா ஷாகாக்கள் மூலம் ஆம் ஆத்மி, ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களை விட ஒரு படி மேலே செல்கிறது. ஆர்எஸ்எஸ் கூட்டம் மாதிரியான ஷாகாக்களுக்கு இணையாக ஆம் ஆத்மி அதன் ஷாகாக்களை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் இங்கு உறுப்பினர்கள் ‘பிரமுகர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள், ஷாகாக்களை ஏற்பாடு செய்கிறார்கள், மற்றும் ஆம் ஆத்மி அவர்களை நடத்தும் விதம் ஆகியவற்றின் மூலம் ஆம் ஆத்மி ஒரு படி மேலே செல்கிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சி ஷாகாக்களில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது, ஆர்எஸ்எஸ் தனது சொந்தக் கொடியை அதன் கிளைகளில் ஏற்றுகிறது என்ற நிலையில் முக்கியமானததாகிறது. சங் பரிவார் எதிரிகள் திரங்காவிற்கு முன் அவர்களின் துவாஜை வைப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள்.

”ஜூலை 1 ஆம் தேதி லக்னோவில் இதுபோன்ற முதல் திரங்கா ஷாகாவை நான் தொடங்குவேன். எங்கள் ஷாகாக்கள் ஒவ்வொரு பாலினத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு சாதிக்கும் திறந்திருக்கும். உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கலாம், ”என்று ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார். இவர் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ளவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

நாடு முழுவதும் உள்ள 65,000 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தினசரி ஷாகாக்களில், குங்கும த்வஜ் விரிக்கப்பட்டு, தன்னார்வலர்கள் பாடல்கள் மூலம் ‘த்வஜ் பிராணம் (அதற்கு வணக்கம்)’ நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அதன்பிறகு, ஒரு ‘பௌதிக் பிரமுக்’ மேற்பார்வையின் கீழ், தன்னார்வலர்கள் சமூகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள், அதே சமயம் ‘ஷரீரிக் பிரமுக்’ உறுப்பினர்களை உடற்தகுதிக்கான உடல் பயிற்சிகளில் வழிநடத்துகிறார். ஷாகாவுக்குப் பிறகு, த்வஜ் கீழே கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சிகளில், மூவர்ணக் கொடியை ஏற்றி, தொண்டர்கள் அரசியல் சாசனத்தைப் படித்த பிறகு, மகாத்மா காந்தி, பீம்ராவ் அம்பேத்கர், பகத் சிங், அஷ்பகுல்லா கான் மற்றும் பிற தலைவர்களைப் பற்றி பேசுவார்கள். கூட்டங்களை நடத்துவதற்காக 10,000 ‘திரங்கா ஷாகா பிரமுகர்களை’ ஆம் ஆத்மி கட்சி நியமிக்க உள்ளது.

சஞ்சய் சிங் கூறுகையில், திரங்கா ஷாகாஸ் நடைபெறும் இடம் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் என்று கூறினார். மேலும், “அது எங்காவது ஒரு வயலில் இருக்கலாம், அல்லது யாரோ ஒருவரின் வீடு, கட்சி அலுவலகங்களாக இருக்கலாம். அனைத்து விருப்பங்களும் ஆராயப்படுகின்றன,” என்றும் உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி பொறுப்பாளரான சஞ்சய் சிங் கூறினார்.

மிக முக்கியமாக, பெண்கள் அனுமதிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களைப்போல திரங்கா ஷாகாக்கள் “ஆண்கள் மட்டும்” பங்கேற்கும் கிளப்களாக இருக்காது என்று சஞ்சய் சிங் கூறினார்.

“இந்த ஷாகாக்கள் நாட்டின் முக்கிய பிரச்சனைகளான சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி, வேலையின்மை போன்றவற்றை விவாதிக்கும், மேலும் அரசியல் மற்றும் அதில் பங்கேற்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற மக்களையும் இந்த ஷாகாக்களுக்கு அழைப்போம்” என்று ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி கூறினார்.

மேலும் “ வெறுப்பு சித்தாந்தத்தால் மக்களை மாசுப்படுத்தி வைத்திருக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் அழுக்குகளை ஆம் ஆத்மி சுத்தம் செய்யும். ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே மக்கள் ஒப்பீடு செய்வார்கள்” என்று வைபவ் கூறினார்.

இறுதியில் தொகுதி அளவில் திரங்கா ஷாகாக்களை நடத்துவது திட்டம் என்றாலும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளில் ஷாகாக்கள் தொடங்கும், ஆம் ஆத்மி இந்த ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் மூலம் உ.பி. அரசியலில் கால் தடம் பதிக்க முயல்கிறது. தேர்தலுக்காக 30 வீடுகளுக்கு ஒரு மொஹல்லா பிரபாரியை (பொறுப்பாளரை) ஆம் ஆத்மி கட்சி நியமிக்கும்.

ஜூலை மாதத்திற்குள் மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் ஷாகா கால் தடம் பதிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, 2022 உபி சட்டமன்றத் தேர்தலில், பெரும்பாலான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர், அக்கட்சி வெறும் 0.38% வாக்குகளைப் பெற்றுள்ளது.

“ஷாகாக்களின் எண்ணிக்கையை இறுதியில் 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உ.பி.யில் முனிசிபல் கார்ப்பரேஷன்கள் முதல் நகர பஞ்சாயத்துகள் அல்லது நகரப் பகுதிகள் வரை சுமார் 12,000 முனிசிபல் வார்டுகள் உள்ளன. அதற்காக எங்கள் கட்சியின் மாநில குழு மாற்றியமைக்கப்படுகிறது,” என்று சஞ்சய் சிங் கூறினார்.

மக்களிடம் சென்றடைவதற்கு ஆம் ஆத்மி மற்ற நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருவதாகவும், ஆனால் இவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மகேஸ்வரி கூறினார்.

இதையும் படியுங்கள்: பீகாரில் இருந்து தொடங்குகிறேன்… அரசியல் பயணம் குறித்து பிரசாந்த் கிஷோர் சூசகம்

கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், திட்டமிட்ட ஷாகாக்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. “சில விமர்சகர்கள் இந்த திட்டம் ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் பி-டீம் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார்கள். எங்களின் நடவடிக்கை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். எங்கள் ஷாகாக்களைப் பார்க்கும்போது, ​​ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றார்.

ஆர்எஸ்எஸ்ஸின் பூர்வி க்ஷேத்ர பிரச்சார் பிரமுக் நரேந்திர சிங், ”ஆம் ஆத்மி தனது திட்டத்தின் முட்டாள்தனத்தை விரைவில் உணரும் என்றார். மேலும், “ஜனநாயகத்தில், ஷாகாக்களை அமைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் மக்களைக் கூட்டுவதற்கு அர்ப்பணிப்பு தேவை. மற்றவர்களும் கடந்த காலத்தில் ஷாகாக்களை நடத்த முயன்றனர், ஆனால் தோல்வியடைந்தனர். ஆர்எஸ்எஸ் ஒரு பெரிய மற்றும் வலுவான வலையமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் சமூகம் மற்றும் மக்களுக்கு ஷாகாக்களை ஏற்பாடு செய்கிறது. வாக்காளர்களை உருவாக்குவதற்காக மட்டுமே ஆம் ஆத்மி ஷாகாக்களை ஏற்பாடு செய்கிறது” என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Their shakha our shakha aap rashtrawad battle rss maidans mohallas up

Best of Express