Three Rafale Deal Documents : இந்திய உச்ச நீதிமன்றம் 2018 டிசம்பர் மாதம் ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட தீர்ப்பின் மறுபரிசீலனை மனுக்களை தற்போது மனுதாரர்கள் தாக்கல் செய்யலாம்.
நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற ரஃபேல் பேர ஒப்பந்த விசாரணையில், “சட்டத்திற்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் தீவிரமாக விசாரணை செய்யும்” என்று தீர்ப்பளித்தது. பின்னர் மறு பரிசீலனை மனுக்களை ஏற்பது தொடர்பாகவும் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் ஆவணங்கள் தொடர்பான விசாரணையில், இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை பரிசீலனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் வரக்கூடாது என்று மத்திய அரசு விரும்பிய அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன ?
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நவம்பர் மாதம் 24ம் தேதி, 20015ம் வருடம் எழுதிய முக்கிய குறிப்பு. அதில் பிரதமர் அலுவலகம் சார்பில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பரிக்கருக்கு எழுதப்பட்டதாகும். பாதுகாப்புத் துறை செயலாளர் ஜி.மோகன் குமார் “பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு, இது போன்ற ஆலோசனையை தவிர்ப்பதின் மூலம் நம்முடைய பேரம் பேசும் சுதந்திர தன்மையை முற்றிலும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது பிரதமர் அலுவலகம்” என்று எழுதியுள்ளார்.
துணைச் செயலாளார் எஸ்.கே.ஷர்மா செயலாளர் மோகன் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “இந்திய பேர பேசும் குழுவில் இல்லாதவர்கள் நேரடியாக, ஒரே நேரத்தில், பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேசுவதை தடுத்து நிறுத்துமாறு நாம் பிரதமர் அலுவலகத்தில் முறையிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நம்முடைய பேரக்குழுவில், எதிர்பார்ப்புகள் எட்டப்படாத பட்சத்தில் வேண்டுமானால் பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டுக் கொள்ளட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க : ரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்
இந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் பதில் கூறும் வகையில் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிகாரிகளும், நடைபெறும் பேரம் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருவதாக தெரிகிறது. ஐந்தாவது பத்தி அளவுக்கதிகமான அர்த்தத்தை சுமந்து வருவது போல் இருக்கிறது. பாதுகாப்புத் துறை செயலாளர் இந்த பிரச்சனையை, பிரதமரின் செக்கரட்டியிடம் பேசி சரி செய்வார். 5வது பத்தி ஷர்மாவின் பார்வைக்கு என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய பேர பேசும் குழுவில் இடம் பெற்றிந்த மூவர் தங்களின் மறுப்பு கடிதத்தை எழுதியுள்ளனர். ஜூன் 1, 2016 அன்று நடந்த நிகழ்வில் இந்த மறுப்பு அறிவிக்கப்பட்டது உறுதியானது. ஒரு குறிப்பிட்ட பேரத்தில் உள்ள 10 அம்சங்களை மறுத்துள்ளது இந்த மூவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியான இந்த தீர்ப்பின் பிறகு, மத்திய அமைச்சகம் தங்களின் கருத்தினை கூறும் போது, மனுதாரர்கள், வெளியான அறைகுறை ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய பாதுகாப்பு மற்றும் தேச நலன் தொடர்பான மதிப்பீடுகளை தவறாக சித்தகரிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மனுதாரர்கள் சமர்பித்திருக்கும் அந்த ஆதாரங்கள் யாவும் முழுமையடையாதவை என்றும் கூறியுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு இணையாக, பிரதமர் அலுவலகம் பேரலல் டீல் நடத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அன்று செயல்பட்டது மற்றும் பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.