Advertisment

கார்கில் நினைவு தினம் : வீர் சக்ரா விருது பெற்றவர் இன்று ட்ராஃபிக் கான்ஸ்டபிள்!

கடவுள் மிகவும் கருணை கொண்டவர். அவர் என்னை உயிருடன் வைத்துள்ளார் என்று வருத்தத்துடன் நினைவு கூறுகிறார் சத்பால் சிங்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்கில் நினைவு தினம் : வீர் சக்ரா விருது பெற்றவர் இன்று ட்ராஃபிக் கான்ஸ்டபிள்!

Tiger Hill Vir Chakra directs traffic in a small Punjab town

Man Aman Singh Chhina

Advertisment

Tiger Hill Vir Chakra directs traffic in a small Punjab town: கார்கில் போர் நடைபெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூறுகின்றோம். ஆனால் ராணுவத்தில் வீரதீர செயல்களுக்காக பதக்கங்களையும், உயரிய பட்டங்களையும் பெற்றவர்களின் நிலை என்ன தெரியுமா?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் பகுதியில் தலைமை போக்குவரத்து கான்ஸ்டபிளாக பதவி வகித்து வருகிறார் சத்பால் சிங். அவரை கொஞ்சம் உற்று நோக்கினால் அவர் சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் இல்லை என்பது உங்களுக்கு தெரியவரும். அவருடைய சட்டையில் இருக்கிறது 4 பதக்கங்கள். இந்திய ராணுவத்தில் உயரிய சேவைகள் புரிந்த வீரர்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா மெடலும் அதில் ஒன்று.

publive-image Twenty years ago, Satpal Singh was a Sepoy, battling Pakistan Army’s counter-attacks on Tiger Hill. (Express photo)

20 வருடங்களுக்கு முன்பு சத்பால் சிங், இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றி, பாகிஸ்தான் ராணுவ வீரர்களை டைகர் ஹில்லில், கார்கில் தாக்குதலில் கொலை செய்தார். அவர் கொலை செய்ததில் பாகிஸ்தானின் வடக்கு பகுதி கேப்டன் கர்னல் ஷேர் கானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. போரில் வீர மரணம் அடைந்த கர்னல் ஷேர் கானுக்கு நிஷான் - இ -ஹைதர் என்ற உயரிய விருது வழங்கி கௌரவித்தது பாகிஸ்தான்.

டைகர் மலையை கைப்பற்றும் ஆபரேசனில் மொத்தம் 8 சீக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, 4 JCO-க்கள் மற்றும் 46 OR-க்கள் செயல்பட்டனர். இந்த தாக்குதலில் 18 நபர்கள் கொல்லப்பட்டனர். மீதம் உள்ள நபர்களில் பெரும்பாலானோர் பலத்த காயத்திற்கு உள்ளாகினர். அதில் மேஜர் ரவிந்தர பர்மரும், லெஃப்டினண்ட் ஆர்.கே. ஷெராவத்தும் அடக்கம்.

ஜூலை 5ம் தேதி, 1999ம் ஆண்டு டைகர் ஹில்லிற்கு நாங்கள் சென்றோம். எங்களிடம் இருந்ததெல்லாம் நாங்கள் உடுத்திய உடைகள் மட்டுமே. ஒன்று உடைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எங்கள் கண் முன்னே இரண்டு ஆப்சன்கள் வழங்கப்பட்டன. நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் என்று 46 வயதான சத்பால் கூறினார்.

ஜூலை 7ம் தேதி இந்திய ராணுவனத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதலை துவங்கியது. நாங்கள் ஒருவரை தாக்கினால் அடுத்தடுத்து ஆட்கள் வந்த வண்ணமே இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் நல்ல தலைமையை பெற்றிருந்தனர் என்றும் தன்னுடைய கார்கில் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் சத்பால்.  பாகிஸ்தான் வீரர்களை நாங்கள் எதிர்கொண்டிருந்த நேரத்தில், எங்களின் சுபேதார் கூறினார், படையையும், படையை நடத்தி வரும் தலைவனையும் நோக்கி தாக்குதலை துவங்குங்கள் என்று. லைட் மெஷின் கன் மூலமாக நான் ஹேர் கானை நான் சுட்டு வீழ்த்தினேன் என்று கூறினார் அவர்.

நான் தாக்குதல் நடத்திய போது, அவர் தான் அந்த குழுவை வழிநடத்தும் கேப்டன் ஷேர் கான் என்பது தெரியாது. ஆனால் அவர், அவருடைய குழுவுடன் மிகவும் சிறப்பான முறையில் சண்டையிட்டு வந்தார். சத்பலின் ப்ரிகேடர் பஜ்வா இது குறித்து கூறுகையில், சத்பாலின் வீரதீர செயலுக்கு நான் தான் அவருக்கு பரம் வீர் சக்ராவை பரிந்துரை செய்தேன். அவர்கள், சத்பாலுக்கு வீர் சக்ரா விருது வழங்கினர்.

ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கோட்டாவில் நான் பஞ்சாபில் 2010ம் ஆண்டு காவல்துறையில் இணைந்தேன். எதோ தவறு இழைத்துவிட்டதாக மட்டுமே தெரிகிறது. என்னுடைய வீர சக்ராவிற்கு மதிப்பு ஏதும் இல்லை. நான் தற்போது தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றுகின்றேன்.

விளையாட்டில் விருதுகள் பெறுபவர்களுக்கு கூட இங்கு நல்ல பணியிடங்கள் கிடைக்கின்றன. பாகிஸ்தானின் உயரிய ராணுவ விருதினைப் பெற்ற ஒருவரை நான் கொன்றுள்ளேன். இருப்பினும்....  கடவுள் மிகவும் கருணை கொண்டவர். அவர் என்னை உயிருடன் வைத்துள்ளார் என்று வருத்தத்துடன் நினைவு கூறுகிறார் சத்பால் சிங்.

மேலும் பார்க்க : ஒட்டு மொத்த இந்தியர்களும் கொண்டாட வேண்டிய நாள்.. கார்கில் வெற்றியின் 20 ஆவது ஆண்டு தினம் இன்று!

Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment