கொள்ளையில் ஈடுபட்ட டிக்டாக் பிரபலம்… கையும் களவுமாக கைது செய்த டெல்லி போலீசார்

அந்த நால்வரும் கௌதம் புத்த நகரில் 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.

By: Updated: September 6, 2019, 10:56:55 AM

TikTok fame dancer shahrukh khan arrested  : உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாரூக் கான் என்ற 23 வயது இளைஞர். இவர் தன்னுடைய நண்பர்கள் ஆசிஃப், ஃபைசான், மற்றும் முகேஷ் ஆகியோர் உதவியுடன் தன்னுடைய நடன வீடியோக்களை டிக்டாக் வீடியோவில் பதிவு செய்து வந்தார் ஷாரூக் கான். அவருக்கு டிக்டாக்கில் 40 ஆயிரம் ஃபாலோவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் அடிக்கடி, ரோட்டில் பயணம் செய்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பல்டா 2 மற்றும் சூரஜ்பூர் பகுதிகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அந்த நால்வரையும் கிரேட்டர் நொய்டாவில், சி.சி.டி.வி. பதிவுகள் வைத்து அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

அவர்களை கைது செய்யும் போது, அவர்களிடத்தில் ஒரு பைக், 5 மொபைல் போன்கள் மற்றும் ரூ.3,520 ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. முகேஷ் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவரைத் தவிர மீதம் மூவரும் புலந்தஷரில் வசித்து வருவதை விசாரணையில் அறிந்து கொண்டனர் காவல் துறையினர்.  அந்த நால்வரும் கௌதம் புத்த நகரில் 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.

மேலும் படிக்க : திகார் சிறையில் ப.சிதம்பரம்: வார்டு-2, அறை எண் 7, கட்டில்- மின்விசிறி வசதி உண்டு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tiktok fame dancer shahrukh khan arrested in theft case near delhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X