Tirupati devasthanam on actor sivakumar controversial speech : திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்தவும் கூட ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்றும் பணக்காரர்களுக்கு தான் அங்கு எப்போதும் மரியாதை என்று கூறியிருந்தார். கோவில் குறித்து அவதூறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் சேகர் ரெட்டி கூறிய போது “கடவுள் முன் ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால் பலர் கோவில் நிர்வாகத்திற்கு பல வகைகளில் நிதி உதவிகள் அளித்து, கோவில் வளர்ச்ச்சியில் நேரடி மற்றும் மறைமுகமாக பங்கேற்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : திருப்பதி கோவில் பற்றி என்ன பேசினார் சிவகுமார்? எஃப்.ஐ.ஆர் முழு விவரம்
அறங்காவலர் சேகர் ரெட்டி தன்னுடைய சொந்த செலவில் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் சப்த கோ மந்திரம் கட்டி வருகிறார். இந்த மந்திரம் இன்றும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக நேற்று கோ மந்திரம் வந்தார் அவர். அவருடன் அறங்காவல குழுத்தலைவர் சுப்பாரெட்டி மற்றும் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சேகர் ரெட்டி சிவக்குமார் விவகாரம் குறித்து பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil