scorecardresearch

கொரோனாவால் வருமானத்தை இழக்கும் திருப்பதி; 4 மாதத்தில் இவ்வளவு இழப்பா?

4 மாதங்களில் உண்டியல் வருமானமாக ரூ. 15 கோடியே 80 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது

கொரோனாவால் வருமானத்தை இழக்கும் திருப்பதி; 4 மாதத்தில் இவ்வளவு இழப்பா?

Tirupati Temple loss rs 385 crores hundi revenue : கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கோவில்கள், பேருந்துகள், ரயில்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் / பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி கோவிலும் மூடபட்டது. இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவானதால் கோவிலுக்கு வரும் காணிக்கை வருமானமும் குறைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான உண்டியல் காணிக்கையில் சுமார் ரூ. 385 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கடந்த ஆண்டைப் போலவே, 40,000 மாணவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்: டிசிஎஸ் நிறுவனம்

ஆண்டு தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இவ்வாண்டியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 100 கோடி வரை உண்டியல் காணிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் வருகை குறைந்ததோடு உண்டியல் காணிக்கையும் குறைந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரியலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் கோவிலுக்கு உண்டியல் வருமானமாக ரூ. 15 கோடியே 80 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tirupati temple loss rs 385 crores hundi revenue