tirupati temple timings : வரும் ஜூலை மாதம் குடும்பத்துடன் திருப்பதி செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் இந்த முக்கிய தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள். பின்பு திருப்பதி சென்ற பின்பு சாமியை தரிசிக்க முடியவில்லை என்று வருத்தப்படாதீர்கள். காரணம், வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் உங்களால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியாது.
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 16 ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளன. ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
read more.. திருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்!
எனவே வெகு தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் சிரம்ப்பட வேண்டாம். இந்த நாட்களுக்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுப்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும். விடுதிகளும் அனுமதி இல்லை. கூடவே அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும். இதனால் பக்தர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகலாம். எனவே இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ஜூலை 17ஆம் தேதி அதிகாலையில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது.. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.