Snowfall drapes Himachal Pradesh’s Keylong in white blanket : தென் இந்தியா முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய, இமய மழையை ஒட்டியிருக்கும் இந்திய மாநிலங்கள் முழுவதும் இப்போது இருந்தே பனி மழையில் நனைய துவங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
பனிக்காலம் துவங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தின் லாஹூல் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பனி பெய்ய துவங்கியுள்ளது. தொடர்ந்து பெய்த கனமான பனி மழையால் ட்ரெக்குகள் லாரிகள் சாலைகளில் பயணம் செய்ய இயலாமல் பெரிதும் சிக்கலை சந்தித்து வருகிறது. பயணம் செய்வதில் சிரமம் இருப்பினும் கூட, அங்கு காணும் காட்சிகள் யாவும் கண்ணுக்கு விருந்து அளிப்பது போன்று அத்தனை “சில்லென்று” இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
மேலும் படிக்க : டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்க்க ஆசையா? இவ்வளவு பணம் இருந்தால் போதும்!
காலையில் எழுந்தவுடன் அப்பகுதி மக்கள் தங்களின் வீட்டுக் கூரைகளில் மேல் ஏறி நின்று பனியை கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் உள்ளூர் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த பனிமழையை பார்த்தால் நாம் எங்கோ அண்டார்ட்டிகா, ஆர்டிக் துருவ பிரதேசங்களில் இருப்பதை போன்று தோன்றுகிறது.
கொரோனா பெருந்தொற்று மட்டும் தற்போது இல்லை என்றால் இந்நேரத்தில் சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழிந்திருக்கும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil