ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்... தமிழர்களின் நிலை என்ன?

Shubhajit Roy

Two Indians test positive for coronavirus on quarantined cruise ship diamond princess :  ஜப்பானின் யோகோஹாமா கடற்கரையில் பிப்ரவரி 5ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் 3700 நபர்கள் உள்ளனர். கொரொனா நோய் தொற்று பீதியால் அந்த கப்பலில் பயணித்த எவரையும் தரையிறங்க அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த பினாய் குமார் சர்கார் அந்த கப்பலில் இருந்து “தங்களை காப்பாற்றுமாறு” மோடியிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றினை அனுப்பினார். இது சமூக வலை தளங்களில் பரவ, அந்த கப்பலில் இருக்கும் இந்தியர்களின் நிலை என்ன என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் படிக்க : மோடி எங்களை காப்பாற்றுங்கள்! கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்!

அந்த கப்பலில் சிறப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேரந்த அன்பழகன் அங்கு 6 தமிழர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பதையும் உறுதி செய்தார். ஆனால் இன்று வந்த செய்தியோ நமக்கு கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அந்த கப்பலின் உள்ளே இருக்கும் 3711 நபர்களில் 132 இந்தியர்கள் கப்பலில் பணியாற்றுகிறார்கள். 6 இந்தியர்கள் பயணிகளாக உள்ளனர். மேலும் படிக்க : கொரோனாவால் கைவிடப்பட்ட ஜப்பான் கப்பலில் தத்தளிக்கும் தமிழர்களின் நிலை என்ன?

இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய தூதரகம்

இந்த கப்பலில் பயணம் செய்த பயணி ஒருத்தர் ஹாங்காங்கில் ஜனவரி 25ம் தேதி தரையிறங்கினார். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பிப்ரவரி 1ம் தேதி உறுதி செய்யப்பட்டு கப்பலில் இருப்பவர்களுக்கும் ஜப்பான் அரசுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டது. வைரஸ் நிலை குறித்தும் அது பரவும் விதம் குறித்தும் அறிய 14 நாட்கள் கால அவகாசம் எடுத்து யோகோஹாமா கடற்கரையில் அந்த கப்பலை நிறுத்த ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 14 நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் பயணிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து அவர்களை வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிப்ரவரி 12ம் தேதி 2020 வரை 174 மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 2 இந்தியர்களும் அடங்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.

மேலும் கப்பலில் இருக்கும் இந்தியர்களிடம் பேசிய இந்திய தூதரகம் ஜப்பான் அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து அவர்களுடைய ஒத்துழைப்பினை நல்கும்படியும் கேட்டுள்ளது. இந்த 14 நாட்கள் முடிவுற்றவுடன் அனைவரும் கப்பலில் இருந்து முறையான பரிசோதனைக்குஇ பிறகு வெளியேற்றப்படுவார்கள். உடல் வெப்பம் மற்றும் இதர அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்ட பிற்கு இந்த மக்கள் தங்களின் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். கப்பலில் பணியாற்றும் நபர்களுக்கு அவர்களுக்கான சம்பள பணம் எவ்வளவோ அதனை முறையாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்த நபர் தற்கொலை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close