சபரிமலை சென்றதால் சொந்த வீட்டிற்கு செல்ல இயலவில்லை…

பிந்து மற்றும் கனகதுர்கா கேரள மாநிலம் கொச்சியில் அரசு பாதுகாப்புடன் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்

By: Updated: January 13, 2019, 09:33:24 AM

Two Women Entered Sabarimala : கடந்த வருடம் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட ஒரு தீர்ப்பு என்றால் அது சபரிமலைக்கு பெண்களை அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான். ஆங்காங்கே போராட்டங்கள், பிரச்சனைகள், வன்முறைகள், தற்கொலைகள் என்று கடவுளின் தேசத்தில் பிரச்சனைகள் இல்லாத நாளே இல்லை எனலாம்.

இந்நிலையில் ஆளும் இடதுசாரி அமைப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிலை நிறுத்துவதில் பிடிவதாமாக நின்றது. பாஜக, காங்கிரஸ், இந்து அமைப்பினர், பந்தளம் குடும்பத்தினர் என தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தனர்.

Two Women Entered Sabarimala – சொந்த வீடுகளுக்கு செல்ல இயலவில்லை

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் கண்ணூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியர் பிந்து அம்மிணி (40 வயது) மற்றும் சிவில் ஊழியர் கனக துர்கா (38 வயது) இருவரும் ஜனவரி 2ம் தேதி ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு நாள் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர் இந்து அமைப்பினர்.

இந்நிலையில் கனகா மற்றும் பிந்துவிற்கு அம்மாநில அரசு முழுமையான பாதுகாப்பு அளித்து கொச்சியில் தங்க வைத்துள்ளது. பிரச்சனைகள் முடியும் வரை தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாத இக்கட்டான சூழலில் தவித்து வருகின்றார்கள் இந்த இரு பெண்களும்.

மேலும் படிக்க : தொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்…. சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Two women entered sabarimala are unable to return home due to threats

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X