/tamil-ie/media/media_files/uploads/2019/03/D2F9X9tUgAANT8O.jpg)
UK court rejects PNB Fraud Nirav Modi’s bail plea
UK court rejects PNB Fraud Nirav Modi’s bail plea : பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி நீரவ் மோடி. சுமார் 13,500 கோடி ரூபாய் பணத்தை அந்த வங்கிக்கு அளிக்க வேண்டிய நிலையில், அவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவரை தேடி கண்டுபிடிப்பதற்கு சர்வதேச காவல்துறையின் உதவியை நாடியது இந்திய அமலாக்கத்துறை. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இவர் சுற்றி வருவதாக புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் கைது இங்கிலாந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார்.
மூன்றாவது முறையாக பெயில் நிராகரிப்பு
மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஒரு மாதமாக சிறையில் தான் இருக்கிறார். நீரவ் மோடியை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மே 30ம் தேதி இந்த வழக்கின் விசாரணை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மார்ச் 29ம் தேதி பெயில் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நீரவ். ஆனால் அதனை விசாரித்த நீதிபதி எம்மா அர்புத்நாட் (Emma Arbuthnot), மீண்டும் நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜராவர் என்பதிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பி, அந்த மனுவை நிராகரித்தார்.
தற்போது மீண்டும் வீடியோகால் மூலமாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலும் மே 24ம் தேதி வரை நீரவ் மோடி ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்று கூறி மூன்றாவது முறையாக மனுவினை நிராகரித்துவிட்டார் எம்மா அர்புத்நாட் (Emma Arbuthnot).
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.