New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/11/uma-bharti-crop.jpg)
Union Minister Uma Bharti during the Parliament session on 5th dec 2016. Express photo by Renuka Puri.
அரசியலில் இருந்து விலகி கங்கையை சுத்தம் செய்வதில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்...
Union Minister Uma Bharti during the Parliament session on 5th dec 2016. Express photo by Renuka Puri.
லிஸ் மேத்யூ
சபரிமலை விவகாரம் உமா பாரதி : சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் வழிபாட்டிற்கு செல்லலாம் என்ற வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் இதற்கு பலதரப்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக சார்பில் வருகின்ற 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரத யாத்ரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இந்நிலையில் பாஜக உறுப்பினரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை குறை சொல்லக் கூடாது. மக்கள் நியாயம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் அதற்கான தீர்ப்பினை வழங்குகிறது. இங்கு நான் நீதிமன்றத்தை குறை சொல்லமாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
பாஜக தலைவர் அமித் ஷா சிறிது நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் கண்ணூரில் “தங்களால் நிறைவேற்ற இயலாத ஒன்றை தீர்ப்பாகவோ உத்தரவாகவோ வழங்காதீர்கள்” என்று நீதிமன்றத்திற்கும் அரசிற்கும் ஒரு வேண்டுகோளாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உமா பாரதி சபரிமலை குறித்து பேசியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. ஒரு பெண்ணை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று இங்கு யாரும் அவளுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. அது தனி நபர் நம்பிக்கை. அதே போல் ஒரு பெண்ணிற்கு எப்போது கோவிலிற்கு செல்ல வேண்டும், எப்போது செல்லக் கூடாது என்பதெல்லாம் தெரியும். எனவே ஒருத்தர் ஒரு பெண்ணை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறுவது சரியானதல்ல.
இந்துக்களில் நம்பிக்கைகள் பெரிய அளவில் காயப்பட்டிருக்கின்ற காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்களின் மனதை புண்படுத்துவது மற்றும் அவர்களின் கோபத்தினை தூண்டுவது போன்ற அனைத்து விதமான சோதனை முயற்சிகளையும் இந்துக்கள் மீதே நடத்தி வருகிறார்கள் என்ற உமா பாரதி தெரிவித்தார்.
அனைத்து மக்களும் விருப்பம் இருந்தால் அங்கே ஒரு கோவில் உருவாகும். சோமநாத ஆலயம் கட்டுவதில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்தது போலே ஒன்று கூடினால் ராமர் கோவிலும் கட்டப்படும். காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் சோசியலிச கட்சிகள் என அனைவரும் ஒன்று கூடினால் அங்கே ராமர் கோவில் வரப்போகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
மற்ற பாஜகவினர் போல் ”ராமர் கோவிலைக் கட்டுவதை சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை அவர் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவில் என்பது இடம் தொடர்பான பிரச்சனையே இன்றி நம்பிக்கை தொடர்பான பிரச்சனை இல்லை. ஒரு கட்டிடத்தையும் ராமரின் பிறப்பிடத்தையும் ஒன்று சேர்த்து பார்க்க இயலாது என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் படிக்க : ராமர் கோவில் தொடர்பாக சட்டம் கொண்டு வர வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்
மேலும், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், மற்றும் மம்தா பானர்ஜீ போன்றவர்கள் ராமர் கோவில் விவகாரத்தை நாங்கள் ஓட்டிற்காக பெரிய விசயமாக்குகின்றோம் என குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கலந்தாலோசித்து இதற்கு ஒரு முடிவினை கொண்டு வரட்டும் என்று கூறியிருக்கிறார்.
தேர்தலுக்காக இதை பெரிய விசயமாக்குகிறதா பாஜக என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த உமா பாரதி, நீதிமன்றங்கள் சுதந்திரமான அமைப்பு, தேர்தல் வருகின்ற நேரத்தில் ராமர் கோவில் பற்றிய பிரச்சனைகளும் எழத் தொடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார். ராம் ஜென்மபூமி எனபது வெற்றியா தோல்வியா என்பதற்கான வாதமில்லை. ஆனால் இது நாட்டின் பெருமையோடு கலந்திருக்கும் ஒரு விசயம் என்றும் கூறியிருக்கிறார்.
நான் அரசில் இருந்து விலகி, கங்கையை தூய்மைப்படுத்தும் முயற்சியில் அதிக நேரம் செலவிடவிரும்புகிறேன். ஆனால் அதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.