Budget 2019 Nirmala Sitharaman Speech in Quotes: இந்திய நாடு 2022ம் ஆண்டில் 75 வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின்சார வசதி, சமையல் கேஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Government envisions using rivers for cargo transportation, which will also decongest roads and railways : FM @nsitharaman https://t.co/iK5EWIia1b #BudgetForNewIndia #Budget2019
— PIB India (@PIB_India) 5 July 2019
2019-2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.
அதில் குறிப்பிடப்படும் முக்கிய அம்சங்களை இங்கு உடனுக்குடன் காண்போம்
பட்ஜெட் 2019 தகவல்கள் உடனுக்குடன் பார்க்க...
2022ம் இந்த ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின்சார வசதி, சமையல் கேஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
2024ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது
விவசாயிகளுக்கு நன்றி : உணவுத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக விளங்க காரணமாக இருந்த விவசாயிகளுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
அனைவருக்கும் சொந்த வீடு : 2022ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் சொந்த வீடு என்ற நிலையை அடைக்க மத்திய அரசு நடவடிக்கை
காந்திபீடியா திட்டம் : என்சைக்ளோபீடியா போல் காந்திபீடியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் காந்திய கொள்கைகள், இளையதலைமுறையினரை எளிதில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய விளையாட்டு வாரியம் - இளைய தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய விளையாட்டு வாரியம் ஏற்படுத்தப்படும். "விளையாடு இந்தியா" திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கவுசல் விகாஸ் யோஜ்னா அறிமுகம் : இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் பொருட்டு, கவுசல் விகாஸ் யோஜ்னா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் உருவாக்கப்படும்: இந்திய உயர்கல்வி திட்டத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்கல்வி கொள்கையை வகுக்க தனிக்குழு ஏற்படுத்தப்படும். ஆராய்ச்சிகளுக்காக தனியாக தேசிய மையம் அமைக்கப்படும். இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் உருவாக்கப்படும்.
சுற்றுலாத் தளங்கள் மேம்பாடு : இந்தியாவில் 17 முக்கிய சுற்றுலாத் தளங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
NRIகளுக்கும் ஆதார் கார்டு : இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை
இந்திய சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் : எலெக்ட்ரிக் வாகனங்கள் ( Electric vehicles)பயன்பாட்டை இந்திய சாலைகளில் விரைவுபடுத்தும் பொருட்டு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜ்னா திட்டத்தின் கீழ், ரூ.80,250 கோடி மதிப்பீட்டில் 12,500 கி,மீ நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறைந்தது வங்கிகளின் வாராக்கடன் : வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு, கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியாக குறைப்பு
நாட்டின் கட்டமைப்பிற்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு : நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரம், சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீ்டு செய்யப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் : வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் முறைப்படுத்தப்படும்.
ரூ.10, 20 புதிய நாணயங்கள் வெளியீடு : ரூ.1,2,50,10 மற்றும் 20 மதிப்புள்ள புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.
வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி : நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது. அரசுக்கு பொறுப்பாக வரி செலுத்தும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசின் வரி வருவாய் அதிகரிப்பு : மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசின் வரி வருவாய் ரூ.11.87 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
மின்சார வாகனம் வாங்குவோருக்கு வரிச்சலுகை : மின்சார வாகனம் வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படும்.
ஜிஎஸ்டி நடைமுறையால் ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
ஏர் இந்தியா பங்குகள் மீண்டும் விற்பனை : ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்
குறைந்த பட்ஜெட் வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிப்பு
வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை
பொதுத்துறை நிறுவங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 5000 கோடி திரட்ட திட்டம்
பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும்
வருமான வரி வரம்பில் மாற்றமில்லை : வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகைகளே தொடரும்.
கார்பரேட் வரி குறைப்பு : கார்பரேட் நிறுவனங்களுக்கான வரிவரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 99.3 சதவீத கார்பரேட் நிறுவனங்கள் 25 சதவீத வரிவரம்பிற்குள் கொண்டு வரப்படுகின்றன. ஆண்டிற்கு ரூ.400 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரை மட்டுமே வரி விதிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கார்பரேட் வரிவிதிப்பு தளர்த்தப்படுகின்றன.
வருமான வரி தாக்கலுக்கு ஆதார் எண் பயன்படுத்தலாம் : பான் கார்டு இல்லாவிட்டால், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம். பான் கார்டு தேவைப்படும் இடங்களில், அவை இல்லாத பட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சலுகை : டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள இனி கட்டணம் கிடையாது. ஆண்டிற்கு ரூ.1 கோடி வரை ரொக்கமாக எடுக்கும்போது 2 சதவீத வரி விதிக்கப்படும்.
சிசிடிவி கேமரா, வாகன உற்பத்தி பொருட்களுக்கு சுங்க வரி உயர்வு : இறக்குமதி செய்யப்படும் சிசிடிவி கேமரா, வாகன உற்பத்தி பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி : சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி மீதான வரி உயர்வு : தங்கம் இறக்குமதி மீதான வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.