Advertisment

Budget 2019 Explained: விமான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஊடக துறையில் அந்நிய நேரடி முதலீடு!

Union Budget 2019 Explained Updates: மத்திய பட்ஜெட் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அலசல்களை அறிய இணைந்திருங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Union Budget 2019 Explained

Union Budget 2019 Explained

India Union Budget 2019 Explained Updates: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கன்னி பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பெரும்பான்மையுடன் இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டும் இதுவேயாகும். இதனால், இந்த பட்ஜெட் தாக்கல் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

Budget Explained: மின் வாகனங்களுக்கு சலுகைகள்

மின் வாகனங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்த, அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளது. தவிர, கூடுதல் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இது மின் வாகன தயாரிப்பாளர்களை கவரும். இதன் மூலம், மாசில்லா சுற்றுச் சூழலை நாம் உறுதி செய்ய முடியும்.

மேலும் படிக்க - Budget 2019  லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Budget Explained: விமான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஊடக துறையில் அந்நிய நேரடி முதலீடு

விமான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஊடக துறையில் அந்நிய நேரடி முதலீடு கொண்டு வர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, விமான போக்குவரத்து, காப்பீடு துறைகளில் இந்த அறிவிப்பு நிச்சயம் முதலீட்டாளர்களை ஈர்க்கும்.

Budget Explained: விமான துறையில் நிதியுதவி

இந்தியாவில் விமான துறைக்கான நிதியுதவி அளவீடுகள் மூலம், இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாட்டு பைனான்சியர்களுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. இதனால், நமது உள்நாட்டு வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும்.

நீண்ட கால பெருநிறுவன பத்திர சந்தை மேம்பாட்டு நடவடிக்கைகள்: AA மதிப்பீடு பத்திரங்களை அனுமதிப்பதன் மூலம், வங்கிகளின் நிதி அதிகரிக்கப்படும். இதனால், வங்கிகள் மீதான அழுத்தம் குறையும்.

5 டிரில்லியன் டாலர் இலக்கு: பொருளாதார வளர்ச்சியை பொறுத்த வரை 2024ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் இலக்கு வைத்திருந்தாலும், நடப்பு நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 லட்சம் டிரில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை: மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1.95 கோடி வீடுகள் கட்டப்பட்டு உரிய பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதோடு சிறு குறு நடுத்தர தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெறும் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பை அதிகரிக்க ரூ.100 கோடி - நிதி எங்கே?

ஐந்து ஆண்டுகளில் ரூ .100 கோடி உள்கட்டமைப்பு செலவினங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய சவால் என்பது நிதியுதவியை அதிகரிப்பது தான்.

Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment