உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு

மே 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

Union Health Minister Harsh Vardhan Set to be WHO Executive Board Chairman

Union Health Minister Harsh Vardhan Set to be WHO Executive Board Chairman : 34 உறுப்பினர்களை கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக தற்போது ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி நகாதனி (Hiroki Nakatani) இருந்து வருகிறார்.  அவருடைய பணிக்காலம் நிறைவுற்றதால், அவரை தொடர்ந்து யார் அந்த பொறுப்பை வகிப்பார்கள் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அடுத்த நிர்வாக குழு தலைவராக ஹர்ஷ் வர்தன் செவ்வாய் கிழமை (19/05/2020)  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றும் ஹர்ஷ் வர்தன் மே 22ம் தேதி இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள உள்ளார். அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு இந்த நிர்வாக குழுவின் தலைவராக ஹர்ஷ் வர்தன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க : ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : ஆளூர் ஷா நவாஸ் இன்று மாலை 07:00 மணிக்கு நம்முடன் உரையாடுகிறார்

194 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தொடர், காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியக்குழு ஏற்கெனவே எடுத்திருந்த முடிவைத் தொடர்ந்து நிர்வாக குழு தலைவராக ஹர்ஷவர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Union health minister harsh vardhan set to be who executive board chairman

Next Story
கொரோனா பெயரில் தகவல்களை திருடும் ஸ்மார்ட்போன் வைரஸ் – வங்கிகளுக்கு சிபிஐ எச்சரிக்கைcorona virus, lockdown, banks, hackers, trojan virus, cerberus, cbi, warning, financial services, online payment, digital transaction, Malware attack, Trojan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com