Liz Mathew
Union Home Minister Amit Shah : 17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய பொறுப்புகள் பிரித்து அளிக்கப்படும் வரை பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முடிவெடுத்திருந்தது பாஜக. ஜனவரி மாதத்துடன் பணி நிறைவு அடைய வேண்டிய அமித் ஷாவின் பொறுப்புகள் தேர்தல் முடியும் வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அமித் ஷா புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். எனவே பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் நிலவி வருகிறது.
ராஜ்நாத் சிங் பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த போது, 2014 தேர்தல் வந்தது. அதில் அவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாஜகவின் தலைவராக பொறுப்புகள் முடிய 18 மாதங்கள் இருந்தது. பாஜகவின் ஒரு உறுப்பினருக்கு ஒரு பதவி தான் என்ற கொள்கையின் படி ராஜ்நாத் சிங்கின் இடம் 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் அவர் பாஜகவின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
பாஜகவில் ஒருவர் தொடர்ந்து 2 முறை மூன்று ஆண்டுகள் என்ற ரீதியில் பாஜகவின் தலைவராக செயல்பட முடியும். ஆனால் ஒரு உறுப்பினருக்கு ஒரு பதவி தான் என்பதில் தீர்மானமாக இருக்கிறது. அமித் ஷாவிற்கு அடுத்து அந்த இடத்தில் ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.பி. நட்டா பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர். உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்க்கது.
மேலும் படிக்க : புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி – அமித் ஷா
நாளை (13/06/2109) அமித் ஷா, பாஜகவின் மாநிலத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்களை சந்தித்து, பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் அதே சமயத்தில் மாநில வாரியாகவும் பாஜக தலைவர்களுக்கான பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிய வருகின்றது. இவை அனைத்தும் இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. பாஜகவின் பொதுசெயலாளர்களை வருகின்ற ஜூன் 18ம் தேதி சந்தித்து பேச உள்ளார் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.