Union Minister Ramdas Athawale : மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு பங்காக செயல்பட்டு வருகிறது இந்திய குடியரசுக் கட்சி. இந்த கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் சங்கலி மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பத்திரிக்கையாளர் ஒருவர், 2014ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
15 லட்சம் ரூபாய் பற்றி மத்திய அமைச்சர் (Union Minister Ramdas Athawale)
இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் கருப்பு பணத்தினை மொத்தமாக மீட்டு, ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார். அந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராம்தாஸ் அதவாலே “15 லட்ச ரூபாய் ஒரே தவணையில் மக்களின் வங்கிக் கணக்கில் வந்து சேராஅது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக 15 லட்ச ரூபாய் வந்தடையும். அரசு கஜானாவில் அவ்வளவு பணம் இல்லை. ஆரம்பத்தில் ஆர்.பி.ஐ பணம் தருவதாக கூறி தற்போது இயலாது என்று கூறிவிட்டதாக கூறினார்.
வாக்குறுதிகள் கொடுத்துவிட்டோம். அதனை நிறைவேற்றும் பொருட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த வாக்குறுதியை தற்போது மோடியால் நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் மக்களின் மற்ற பிரச்சனைகளுக்கு மோடி தீர்வு கண்டிருக்கிறார் என்று பதில் அளித்தார்.
மேலும் ராம்தாஸ் அதவாலே, காங்கிரஸ் வேண்டுமானால் தற்போது சில மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : இத்தனை நலத்திட்டங்கள் செய்தும் மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது ஏன் ?