UP assembly elections 2022 : முலாயம் சிங் யாதவின் மருமகள் சமாஜ்வாடி கட்சியில் இருந்து புதன்கிழமை வெளியேறியது அகிலேஷ் யாதவின் திட்டங்களுக்கு சரியாக பொருந்தும் ஒன்றாக இருக்கும். சமாஜ்வாடி கட்சியினர் பலர், அபர்ணா யாதவை சமாஜ்வாடி கட்சிக்குள் வைத்துக் கொள்ள எந்த சிறப்பு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். தனித்து களம் காணும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அரசியல் பொதுவாழ்வில் தன்னுடைய குடும்பத்தினரின் கால்தடத்தை குறைக்க முயல்வதால் இது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் பெருந்தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் இந்த தேர்தலில் அவரின் பங்கு பெரிய அளவில் இல்லை. மேலும் சில முறை கட்சி தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. குடும்ப தகாராறின் போது அகிலேஷ் பக்கம் துணை நின்ற ராம் கோபால் யாதவ் ஆகிய முக்கிய தலைகளின் பங்கீடு இந்த தேர்தலில் குறைந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பாஜகவில் இணைந்த முலாயம் சிங் மருமகள்… உ.பி., வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!
சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பேரணிகள் நடத்திய போதும், பெரிய கட்சிகளில் இருந்து சமாஜ்வாடிக்கு வந்த அரசியல் தலைவர்களை வரவேற்கும் போது ராம் கோபால் யாதவை காண இயலவில்லை. சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலகத்திலும் ராம் கோபாலை சந்திக்க முடியாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர், கோண்டாவில், அகிலேஷ் யாதவுடன் இணைந்து ஜனவரி 7ம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் பண்டிட் சிங்கின் சிலையை திறந்து வைத்தார்.
ராம் கோபால் இன்னும் கட்சியின் மிக முக்கிய தலைவராக இருக்கிறார். மேற்கு உத்திரப் பிரதேசத்தை “கவர்” செய்யும் முதல் இரண்டு கட்ட தேர்தல்களுக்கான பிரச்சார பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் கூறியுல்ளார். பிப்ரவரி 10 மற்றும் 14 தேதிகளில் முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த தேர்தலின் போது சமாஜ்வாடி கட்சி பொதுக்கூட்டங்களில் இருந்து காணாமல் போன மற்றொரு ஆள், அகிலேஷ் யாதவின் மற்றொரு உறவினரான தர்மேந்திரா. அவர் ஒரே ஒருமுறை பதாவுன் தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். நாடாளமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2017ம் ஆண்டு பிரச்சாரத்தின் போது அகிலேஷுடன் தோளோடு தோள் சேர்ந்து தேர்தல் பணியாற்றிய அவருடைய மனைவி டிம்பிள் கூட இந்த தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கண்ணில் படவில்லை. கன்னோஜ் தொகுதியின் எம்.பியாக இருந்த அவரின் அரசியல் வாழ்க்கை பிரகாசிக்க துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த தேர்தலின் போது அமைதியாக இருக்கிறார்.
தொடர்ச்சியான பல சச்சரவுகளுக்கு பிறகு மீண்டும் சமாஜ்வாடி கட்சிக்கு திரும்பிய முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் சிங் அகிலேஷின் தலைமையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. SP மற்றும் ஷிவ்பாலின் பிரகதிஷீல் சமாஜ் கட்சி இணைந்து போட்டியிடும் என்று இருவரும் சமீபத்தில் அறிவித்தனர், ஷிவ்பால் கட்சியினர் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட ஷிவ்பால் மேற்கொண்டு மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பங்கேற்பதாக தெரியவில்லை.
சமாஜ்வாடி மீது சுமத்தப்படும் வம்ச அரசியல் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக குடும்ப உறுப்பினர்களை தூரத்தில் வைத்திருப்பது அகிலேஷ் எடுத்த முடிவு இது என்று பலரும் கூறுகின்றனர். 2014 சட்டமன்ற தேர்தலில், முலாயம் சிங் மெயின்புரி மற்றும் அசம்கரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ராம்கோபாலின் மகன் ஃபிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திரா பதாவுன் தொகுதியிலும் மற்றும் டிம்பிள் கன்னோஜ் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். முலாயம் பின்னர் மெயின்புரி தொகுதியை காலி செய்தார், அவரது மூத்த சகோதரர் மறைந்த ரத்தன் சிங் யாதவின் பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் அதே தொகுதியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு தேர்தலின் போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. சமாஜ்வாடி கட்சியில் முலாயம் மற்றும் அகிலேஷ் மட்டுமே வெற்றி பெற்றனர். சமாஜ்வாடியை தாக்கும் பதமாக பாஜக அடிக்கடி பரிவார்வாடி (குடும்ப நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளும்) கட்சி என்ற சொல்லாடலை பயன்படுத்தியது.
கோவாவில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி மட்டுமே பிரிக்கும்… ப.சி.க்கு கெஜ்ரிவால் பதிலடி
தந்தையின் நிழலில் இருந்து வெளியேறிவிட்டதை அகிலேஷின் தற்போதைய நிலை உணர்த்துகிறது. தற்போது பெரிய சமாஜ்வாடி குடும்பமே தேர்தல் சமயத்தின் போது கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ தேர்தல் விவகாரங்களில் தலையிடாமல் உள்ளது. முக்கிய முஸ்லீம் தலைவர் அசம் கான் சிறையில் உள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் அகர்வால் 2018ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். ம லும் பெனி பிரசாத் வெர்மா மற்றும் பரஸ்நாத் யாதவ் மற்றும் பெரிய தலைவர்களான பகவதி சிங் போன்றோரும் காலமானார்கள்.
வெர்மா சமாஜ்வாடி கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர், பிரஷாந்த் ஏழு முறை மால்ஹானியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு பெற்றவர். இவர்கள் அனைவரும் முலாயம் சிங் யாதவின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அகிலேஷுடன் பிரச்சார காலங்களில் தோன்றிய நபர்களும் ஒரு முக்கிய செய்தியை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சி நிகழ்வுகள் என அனைத்தியும் சமாஜ்வாடி கட்சி தலைவர் யாதவர்கள் இல்லாத இதர ஓ.பி.சி. தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அத்தகைய தலைவர்களில் ராம் அச்சல் ராஜ்பர், ஓம் பிரகாஷ் ராஜ்பர், கேசவ் தேவ் மௌரியா மற்றும் சஞ்சய் சவுகான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சமாஜ்வாடி யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அகிலேஷ் கடுமையாக முயற்சித்து வருகிறார்.
மற்ற தலைவர்கள் அதிக அளவில் இருக்கும் போதும் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் இதர நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்களில் அகிலேஷ் யாதவே பேசுகிறார். முன்னாள் பாஜக அமைச்சர் தாரா சிங் சவுகான் எஸ்பியில் இணைந்தபோது, ஊடகவியலாளர் ஒருவர் சவுகானிடம் கேள்வி கேட்க முயன்றார். ஆனால், அவர் சார்பாக நானே பதில் அளிப்பேன் என்று அகிலேஷ் குறுக்கிட்டு பதில் அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.