UP CM Yogi Adityanath’s father cremated in Uttarakhand : உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கார்வால் மாவட்டம் புல்சாட்டியில் பிறந்தவர் யோகி. தன்னுடைய குடும்பத்தை பிரிந்த அவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை உ.பி.யில் செலவிட்டார்.
அரசியலில் ஈடுபட்ட அவர் 5 முறை எம்.பி.யாக பணியாற்றினார். ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் பிஸ்வந்துக்கு 89 வயது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மூப்பின் காரணமாக ஏப்ரல் 20ம் தேதி உயிரிழந்தார் அவர்.
ஆதித்யநாத் லக்னோவில் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு தன் தந்தையின் மரண செய்தி தெரியவந்தது. ஆனாலும் ஆலோசனை கூட்டத்தை 2 நிமிட மௌனத்திற்கு பிறகு மீண்டும் துவங்கினார். உ.பி.யில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், மக்கள் நலன் குறித்து முடிவுகள் எடுக்க தான் கட்டாயம் உ.பி.யில் இருக்க வேண்டும் என்று உணர்ந்த ஆதித்யநாத் தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை.
நேற்று உத்திரகாண்ட்டில் நடந்த இறுதி அஞ்சலியில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சபாநாயகர் பிரேம்சந்த் அகர்வால், அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலியிலும் பங்கேற்காத யோகி 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை தொடர்ந்தார். தன்னுடைய தாய்க்கு எழுதிய கடிதத்தில் தந்தை இறப்பதற்கு முன்பு அவரை பார்க்க விரும்பினேன். ஆனால் பணிச்சூழலால் என்னால் இயலாமல் போனது. கடின உழைப்பையும் நேர்மை சுயநலமற்ற தன்மையையும் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் போனதிற்கு மன்னிக்கவும் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
23 கோடி மக்களை காக்கும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது. லாக்டவுனுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதால் என்னால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. போன ஜென்மத்தில் நான் மாதவம் செய்த பலனால் நான் உங்களுக்கு மகனான பிறந்தேன். லாக்டவுன் நீக்கப்பட்ட பிறகு நிச்சயம் வந்து உங்களை சந்திக்கின்றேன் என்று அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : காட்டு வழிப் பயணம் : சொந்த ஊரை நெருங்கும் போது மரணமடைந்த 12 வயது சிறுமி