ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற பலே டீச்சர் ; அதிகாரிகள் அதிர்ச்சி

கொரோனா ஊரடங்கு காரணமாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர் உயர் அதிகாரிகள்.

UP government school teacher took home RS 1 crore by working at 25 schools  : உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. அவர் அங்குள்ள மெயின்புரி நகர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியாராக பணியாற்றுகிறார். சமூகத்தில் பின் தங்கியிருக்கும் விளிம்பு நிலை பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் பள்ளியாகும் இது. இந்த பள்ளி உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. உ.பி.யில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : கொரோனா ஊரடங்கு : 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய தேவரகொண்டா அறக்கட்டளை!

அனாமிகா சுக்லாவின் பெயர் ஒரே நேரத்தில் ரேபரேலி பள்ளி பதிவேட்டிலும், மெயின்புரி பள்ளி பதிவேட்டிலும் இருப்பது கண்டறியப்பட்டது. பள்ளி வாரியாக ஆசிரியர்களுக்கான டேட்டா பேஸான மனவ் சம்ப்தா உருவாக்கப்படும் போது இந்த குளறுபடி கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து கஸ்தூரிபா பள்ளிகளுக்கும் அறிக்கை அளிக்கப்பட்டு அனாமிகா சுக்லா என்பவரின் பெயர் வருகை பதிவேட்டில் இருக்கிறாதா என்று கேள்வி எழுப்பட்டது. விசாரணை முடிவில் 25 மாவட்டங்களில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க : ஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா!

கடந்த 13 மாதங்களாக, இந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் 1 கோடிக்கு மேலே சம்பள பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவரின் சம்பளத்திற்கு அதிகமாக பணம் கிடைப்பது தெரிந்திருந்தால் உடனே இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்திருக்கலாம். ஆனால் அவர் அது எதையுமே செய்யவில்லை. தவறு கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு அனுப்பபட வேண்டிய சம்பளத் தொகை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர் உயர் அதிகாரிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close