மோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் - மத்திய அமைச்சர்

2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக இது வரை செயல்பட்டு வந்தவர் பிகாரைச் சேர்ந்த அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா (Upendra Kushwaha). மோடியின் தலைமைப் பண்பு ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளது என்று கூறி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா இன்று ராஜினாமா செய்திருக்கிறார் இந்த அமைச்சர்.

ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சியின் தலைவரான உபேந்திர குஷ்வாஹா மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் தங்களின் கட்சி விலகுவதாக கூறியிருக்கிறார். பிகாரிலும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அவர் அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : 5 மாநிலத் தேர்தல்களிலும் பின்னடவை சந்திக்கலாம் பாஜக : கருத்துக் கணிப்பு முடிவுகள்

நரேந்திர மோடியின் கீழ் நடைபெறும் ஆட்சியால் ஏமாற்றம் – உபேந்திர குஷ்வஹா (Upendra Kushwaha)

இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்துள்ளார். அந்த கடிதத்தில் மோடியின் ஆட்சி தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். பாஜகவிற்கும் உபேந்திராவிற்கும் இடையிலான மனக்கசப்பு அக்டோபர் மாதத்தில் அமித் ஷா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறியதில் இருந்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  பதவியில் இருந்து விலகியதால் இன்று ஆளுங்கட்சி சார்பில் நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு செல்லவில்லை உபேந்திரா.

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவினை பின்பற்றுகிறதா பாஜக ?

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவினை பின்பற்றுகிறது பாஜக என்ற குற்றச்சாட்டினை முன் வைத்த உபேந்திரா குஷ்வாஹா “ஆர்.எஸ்.எஸ் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது. அந்த அமைப்பின் அஜெண்டாவினைத் தான் பின்பற்றுகிறது பாஜக. சமூக நீதிகளை புறக்கணிக்கும் ஒரு ஆட்சியை அமைத்துள்ளது பாஜக” என்றும் குற்றம் சாட்டினார்.

இன்று மாலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க உள்ளார் குஷ்வாஹா என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தனையும் உணர்ந்த பின்பு இனி ஒரு நேரமும் பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக தான் என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்தேன் என்று கூறினார். பாஜகவினர், பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாருடன் இணைந்து தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close