/tamil-ie/media/media_files/uploads/2018/12/cats-36.jpg)
Uttar Pradesh BJP leader Mohammed Miyan
Uttar Pradesh BJP leader Mohammed Miyan : உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சம்பால் பகுதியில், திங்கள் கிழமையன்று பாஜக தலைவர்கள் முகமது மியான், சம்பால் பகுதி பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஷ் சின்ஹால் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் செருப்பு மற்றும் ஷூக்கள் விற்கும் வேலைக்கு சென்று வருபவர் மனோஜ் குஜ்ஜார். உடல் ஊனமுற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவர்கள் இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்கள் இருவரையும் பார்த்து சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பேசியும், ஸ்லோகன்கள் எழுப்பியும் இருக்கிறார்.
மேலும் படிக்க : ஈவு இரக்கமின்றி கொல்லுங்கள்... வீடியோவில் சிக்கிய கர்நாடக முதல்வர்
Uttar Pradesh BJP leader Mohammed Miyan - video
அதன் பின்பு உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சித்து பேசியுள்ளார். அந்த சமயம் முகமது மியான், தடி ஒன்றை எடுத்து குஜ்ஜார் வாயில் அடித்து மிரட்டியுள்ளார். வீடியோவில் பதிவாகிய இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக தலைவரின் இந்த ஈவு இரக்கமற்ற செயலுக்கு மக்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், மனோஜ் குஜ்ஜாரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.
இது தொடர்பாக முகமது மியானிடம் கேள்விகள் எழுப்பிய போது, "குஜ்ஜார் குடித்துவிட்டு நரேந்திர மோடி பற்றியும், யோகி ஆதித்யநாத் பற்றியும் கொச்சை வார்த்தைகள் ப்ரயோகம் செய்தார். அதனால் அவரை மிரட்டவே நான் தடியை தூக்கினேன். அதைப் பார்த்து அவன் பயந்து இடத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டான்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.