/tamil-ie/media/media_files/uploads/2020/06/UP.jpg)
Uttar Pradesh news Man dies outside government office his body dumped in garbage van
Uttar Pradesh news Man dies outside government office his body dumped in garbage van : உத்தர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது பால்ராம்பூர் மாவட்டம். அந்த மாவட்டத்தின் அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவர் அலுவலகத்திலேயே மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், அவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர் அந்த நிகழ்வை அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இறந்த நபரின் பெயர் முகமது அன்வர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அலுவலக வளாகத்தில் நடந்து வந்த அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். அவரை பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க : ஆசிரியர் தகுதி தேர்வில் முதலிடம்; ஆனால் குடியரசு தலைவர் பெயர் தெரியாது!
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற இந்த மனிதாபிமானமற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 3 காவல்துறையினர் உட்பட 7 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்தவரின் உடலை அப்புறப்படுத்தும்போது மாநகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமல் இருந்ததும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
அலுவலகத்தில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதும் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.