விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி

எரிவாயு கசிவு காரணமாக மக்களை வெளியேற்றும் அவசர சேவை ஊழியர்களும் மயக்கமடைந்தனர்.

vizag gas leak
vizag gas leak

விசாகப்பட்டினம் அருகே கோபாலபட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாலர்கள் இன்று காலை ஆலையை திறக்க தயாராகிய நிலையில், அதிகாலை நேரத்தில் எரிவாயு கசியத் தொடங்கியது.

அதிரடி நிபந்தனை, கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு: ஆன்லைனில் ‘புக்’ செய்ய அனுமதி

மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான மக்களும் சுவாசிக்க கஷ்டப்படுபவர்களும், நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கே.ஜி.ஹெச் மருத்துவமனையின் அதிகாரி, இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.

முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி எரிவாயு கசிவு சம்பவம் குறித்து விசாரித்ததோடு, உயிர்களைக் காப்பாற்றவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைக்கு அவர் வருகை தருவார் என்று தெரிகிறது. முதலமைச்சர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் 5 கி.மீ சுற்றளவு பகுதியை காலி செய்யத் தொடங்கியுள்ளன. விசாக் கலெக்டர் வி வினய் சந்த், “என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள், அவர்களால் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்” என்றார்.

ஐந்து கிராமங்களும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் சந்த் கூறினார். “மிகவும் சீரியஸானவர்கள் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விஷ வாயு கசிந்ததால் காலை 6 மணி வரை நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இப்போது, இது கொஞ்சம் தணிந்துள்ளது.  செல்ல நாய்கள், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு விலங்குகள் இறந்துவிட்டன. நிலைமையை மதிப்பிடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் குழு கிராமங்களை அடைந்துள்ளது. ஓரிரு மணி நேரத்தில், நிலைமை மேம்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜி கிஷன் ரெட்டி இறந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்து, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். “இன்று அதிகாலை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பிரைவேட் நிறுவனத்தில் எரிவாயு கசிவு காரணமாக, காலமான 5 பேரின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். தேவையான நிவாரண நடவடிக்கைகளை வழங்க என்.டி.ஆர்.எஃப் குழுக்களுக்கு அறிவுறுத்தினார். நான் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

நைதுத்தோட்டா பகுதிக்கு அருகிலுள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் இருந்து அதிகாலை 2:30 மணியளவில் தொடங்கிய எரிவாயு கசிவு, கண்களில் எரியும் உணர்வையும், உடல்கள் மீது வெடிப்பு மற்றும் சுவாசத்தில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதாக குடியிருப்பாளர்கள் புகார் கூறினர்.

“நாங்கள் வாயு வாசனையால் விழித்தோம். நாங்கள் வெளியே சென்றபோது, காற்று முழுவதும் வாயு நிரம்பி காணப்பட்டது. இது எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து சுவாசப் பிரச்சினைகள் மற்றும் நுரையீரலில் எரியும் உணர்வை ஏற்படுத்தியது” என்று நாயுதுத்தோட்டாவில் வசிக்கும் டி.வி.எஸ்.எஸ் ரமணா கூறினார். “நாங்கள் இப்போது இங்கிருந்து வெளியேற்றப்படுகிறோம். எங்கள் உறவினரின் இடத்திற்குச் செல்கிறோம்,” என்ற ரமணாவுக்கு 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழிற்சாலை பூட்டப்பட்ட பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.கவுதம் ரெட்டி தெரிவித்தார். தொழிற்சாலைகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க அனைத்து தொழில்களுக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆரம்ப தகவல் என்னவென்றால், தொழிலாளர்கள் எரிவாயு சேமிப்பு தொட்டி கசியத் தொடங்கியபோது அதைச் சோதித்ததாக தெரிகிறது. ஒரு முழுமையான விசாரணை மட்டுமே, சரியாக என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தும்” என்று ரெட்டி கூறினார்.

எரிவாயு கசிவு காரணமாக மக்களை வெளியேற்றும் அவசர சேவை ஊழியர்களும் மயக்கமடைந்தனர். பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஜிஹெச் மருத்துவர் ஒருவர், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். எல்ஜி பாலிமர்ஸ் பிரிவில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடன், தவணை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளின் இந்த முக்கிய ‘அப்டேட்’ தெரிஞ்சுகோங்க!

போலீஸ் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அந்த பகுதியை விட்டு, வெளியேறும்படி அறிவிப்புகளை வெளியிட்ட போதிலும், பலர் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கொண்டனர். “சிலர் எங்கள் பேச்சைக் கேட்டு வெளியே வந்தார்கள், நாங்கள் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம், ஆனால் பலர் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் வைத்து பூட்டிக் கொண்டனர். சிலர் தங்கள் வீடுகளுக்குள் மயக்கமடைந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

எல்ஜி பாலிமர்கள் 1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பாலிமர்களாக விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vizag gas leak death toll lg polymer plant in visakhapatnam

Next Story
டாஸ்மாக் விற்பனை ஒரே நாளில் ரூ 170 கோடி: மதுக் கடைகளில் நீண்ட வரிசைcoronavirus latest news updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com