சிபிஐ சிறப்பு இயக்குநர் மற்றும் சிபிஐயின் தலைமை அதிகாரிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ மையமே வழக்கு பதிவு செய்திருக்கிறது. சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்குகளின் குற்றவாளிகளை வழக்கில் இருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் ராகேஷ் அஸ்தானா.
இது தொடர்பான செய்தி ஒன்றினை வெளியிட்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டி, “பிரதமரின் செல்லப்பிள்ளை, குஜராத்தில் இருந்து வந்த அதிகாரி, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ஈடுபட்ட சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரி, சிபிஐயில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தற்போது லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்” என ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார்.
யாரிந்த சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா ?
ராகேஷ் அஸ்தானா 1984ம் ஆண்டு பேட்சில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். குஜராத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தின் காரணமாக சபர்மதி ரயில் எறிக்கப்பட்ட வழக்கை விசாரித்தவர்களில் இவரும் ஒருவர். பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய வட்டாரங்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
ராகேஷ் அஸ்தானாவின் மீது என்ன குற்றச்சாட்டு
சிபிஐ விசாரித்து வரும் வழக்கு ஒன்றின் குற்றவாளியை, வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றிருப்பதாக அவர் மீதும் அவருடன் பணி புரிந்த மற்ற அலுவலகர்கள் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றிய செய்தியை முழுமையாக படிக்க
இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடன் தன்னுடைய மேலதிகாரியான அலோக் வர்மாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.