West Bengal assembly elections 2021 ; In spotlight: The nephew Banerjee : மிக நீண்ட போராட்டத்திற்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டதற்காக மமதா பானர்ஜீ அறியப்பட்டால் அவருடைய சகோதரன் மகன் அதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறார். 2011ம் ஆண்டு, மமதா பானர்ஜி முதல்வராக அரியணை ஏறிய பின்பு பொதுவெளிச்சத்தற்கு வந்தார் அபிஷேக் பானர்ஜீ. தற்போது 33 வயதாகும் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் இடத்தில் உள்ளார். இது பல மூத்த தலைவர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதோடு அவர்களை கட்சியில் இருந்து வெளியேறவும் நிர்பந்தம் செய்தது.
டையமண்ட் துறைமுகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் மீது எப்போதும் மமதாவிற்கு ஒரு பாசம் இருக்கிறதை உணர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை ஒரு இலக்காக வைத்து பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸில் இருந்த முன்னாள் தலைவர்கள் சுவேந்து அதிகாரி, சௌமித்ரா கான் உள்ளிட்ட பலரும் அவர் மீது ஊழல் புகார்களை முன் வைக்கின்றனர்.
Advertisment
Advertisements
இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இடது முன்னணியின் 34 வருட ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்த போது அபிஷேக் முதன்முறையாக பொது வெளிச்சத்திற்கு வந்தார். 23 வயதான அவரை திரிணாமுல் இளைஞர் அணியின் தலைவராக அறிவித்தது கட்சித் தலைமை. அந்த பிம்பத்தை நிலைநிறுத்த ஒவ்வொரு ஆண்டும் அவருடைய தொகுதியில் விளையாட்டு போட்டிகளை வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
ஜனவரி 2014ம் ஆண்டு கட்சி தலைமைக்கும் தனக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சோமன் மித்ரா. அப்போது அவரின் தொகுதி காலியானது. அந்த இடத்தில் அபிஷேக் பானர்ஜீ நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். 26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சிக்குள் அபிஷேக் வளர்ச்சிக்கு முதலில் பலியானவர் முகுல் ராய். அவரின் கருத்துகள் அமைதியாக்கப்பட்டது. பிறகு 2017ம் ஆண்டு பாஜகவிற்கு சென்றார் முகுல் ராய். அவரைப் போன்றே அதிகாரி மற்றும் சௌமித்ரா கான் ஆகியோர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதால் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
முகுல் ராய் கட்சியில் இருந்து விலகிய பிறகு அபிஷேக்கிற்கு தேர்தல் உத்திகளை மேலாண்மை செய்யும் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளாக சரிந்தது. கட்சியினர் கூற்றுப்படி, அபிஷேக் தான் பிரசாந்த் கிஷோரை இந்த ஆண்டு தேர்தலுக்கு வியூகம் அமைக்க அழைத்ததாக கூறப்படுகிறது. கட்சியில் உயர்ந்த இடம் பிடிக்க அவருக்கு உதவிகள் வழங்கப்படுகிறது என்ற புகார் குறித்து பேசிய அவர், அபிஷேக் ஜனவரி மாதம், அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு 35 பதவிகளை நான் பெற்றிருப்பேன் என்றார்.
அபிஷேக் மீது கட்சிக்குள் பெருகி வரும் மனக்கசப்பை கருத்தில் கொண்டு மமதா அவருக்கு கொடுத்த பொறுப்புகள் சிலவற்றை திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனாலும் அவரின் இரும்புக் கரங்கள் அபிஷேக்கின் தோள்கள் மீது இருக்கிறது. நிலக்கரி மற்றும் சுரங்க ஊழல் தொடர்பாக அபிஷேக்கின் மனைவி ருஜ்ஜிரா பானர்ஜீயிடம் சிபிஐ விசாரணை நடத்த வந்த போது அபிஷேக்கின் குழந்தை கையை மமதா இறுக பற்றிக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil