West Bengal Madrasa Teacher pushed off train : மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்திருக்கும் இருந்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருந்து கூக்லிக்கு 20ம் தேதி ரயில் ஒன்றில் பயணித்த கொண்டிருந்தார் ஹஃபீஸ் முகமது ஷாரூக் ஹால்தர். 26 வயதான இவர் மதராஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ரயில் தக்கூரியாவில் இருந்து பார்க் சர்கஸ் ஸ்டேசன் சென்று கொண்டிருக்கும் அவருடைய கம்பார்ட்மெண்டில் ஏறிய சில கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசமிட்டபடி உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் ஹால்தரிடம் வந்து ஜெய் ஸ்ரீ ராம் கூறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதை அவர் மறுத்ததால் ஹால்தரை பலமாக தாக்கியுள்ளனர் என்றும், அப்போது அவரை காப்பாற்ற யாரும் முற்படவில்லை என்றும் நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பார்க் சர்கஸ் ஸ்டேஷன் வரும் போது அவர்கள் ட்ரெய்னில் இருந்து என்னை தள்ளிவிட்டனர். அருகில் இருந்த சில உள்ளூர் நபர்கள் என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியுள்ளார் ஹால்தர்.
காவல் தரப்பு கூறும் போது, அவருக்கு லேசான காயங்கள் பட்டிருப்பதாகவும், அவரை சித்தராஞ்சன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் ரயிலில் ஏறும் போதும் இறங்கும் போதும் கூட்ட நெரிசல் காரணமாகவே அவருடன் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
பசந்தி பகுதியில் வசித்து வரும் ஹால்தர் முதலில் தோப்சியா காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் ரயில்வே காவல்துறையிடம் மட்டுமே புகார் அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறிவிட்டதால், அவர் அங்கிருந்து பல்லிகுங்கே ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அடையாளம் காணப்படாத அந்நபர்கள் மீது ஐ.பி.சி. 323, ஐ.பி.சி. 325, 506, மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கான்னிங் - சீல்டா செல்லும் 34531 எண் கொண்ட ரயிலில் நடைபெற்றது.
மேலும் படிக்க : ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…