இந்திய குற்றவியல் சட்டம் 377 : இந்தியாவில் ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை உறுதிப்படுத்தும் சட்டமே இந்திய குற்றவியல் சட்டம் 377.
பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்யும் போது உருவாக்கப்பட்டது இந்த சட்டம். இந்த சட்டத்தை மாற்றக் கூறியும், ஓரினச் சேர்க்கையினை சட்டப் பூர்வமாக மாற்றக் கோரியும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஜூலையில் விசாரணைகள் மேற்கொண்டது.
அந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணையில் இன்று முக்கியத் தீர்ப்பினை வெளியிட இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்திய குற்றவியல் சட்டம் 377 என்றால் என்ன?
இரண்டு வயது வந்த ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக கருதும் சட்டமே இந்தியக் குற்றவியல் சட்டம் 377. இச்சட்டத்தின் படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது அபராதங்களுடன் கூடிய 10 வருட சிறை தண்டனைகளோ வழங்கப்படும் என்பதாகும்.
இச்சட்டம் 1861ம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் என கருதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
2009ம் ஆண்டு இந்த சட்டம் குறித்த விசாரணை மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக தனிமனித உரிமைகளை மீறுவதாக இந்த சட்டம் அமைந்திருக்கிறது என்று கூறியது.
ஆனால் 2013ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் மற்றும் LGBT ஆதரவாளர்கள் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அது தொடர்பான விசாரணை 2018ம் ஆண்டு மீண்டும் வந்தது. தனிமனிதர்களின் தேர்வு குறித்து அவர்களை அச்சமான சூழலில் இருக்க வைப்பது சரியில்லை என்று கூறியது உச்ச நீதிமன்றம்.
இச்சட்டத்தின் மீதான இறுதிக் கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அது தொடர்பான Live Updates பெற