நந்தகோபால் ராஜன்
Israeli Whatsapp Spyware Pegasus: 1,400 பயனர்கள் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் தாக்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது.
இதில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்களும் , சட்ட வல்லுனர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அடங்கும் என்ற செய்தியை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் கடந்த வியாழனன்று வெளியிட்டது.
இந்தியா அரசாங்கம் இதற்கான உரிய விளக்கங்களையும், பயனர்களின் படுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் கொடுக்க வேண்டும் என்று வலியுறித்தி இருந்தது.
Government of India is concerned at the breach of privacy of citizens of India on the messaging platform Whatsapp. We have asked Whatsapp to explain the kind of breach and what it is doing to safeguard the privacy of millions of Indian citizens. 1/4 pic.twitter.com/YI9Fg1fWro
— Ravi Shankar Prasad (@rsprasad) October 31, 2019
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதமே இந்திய அதிகாரிகளுக்கு என்எஸ்ஓ ‘ஸ்பைவேர்’மூலமாக 121 பயனர்கள் பாதித்திருப்பதாக எழுத்து பூர்வமாக வாட்ஸ்அப் கொடுத்து விட்டதாக நம்பகத் தகுந்த தகவல் ஒன்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்திருக்கின்றன. இந்த ஸ்பைவெரால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தனித்துவமாக உறுதி செய்யா விட்டாலும், இந்த எண்ணிக்கை தற்போதும் அதே அளவில் தான் இருக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நம்புகிறது.
ஆங்கிலத்தில் படிக்க - In September, WhatsApp told govt 121 individuals affected by Pegasus spyware
விரிவான விளக்கம் :
17 மே 2019 அன்று, இந்தியா தொலை தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CERT-IN , CIVN-2019-0080 என்ற ஒரு எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டது.
அதில், வாட்ஸ்அப்பில் ஒரு பாதிப்பு (அல்லது) குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட கருவியில் ஸ்பைவர் மூலம் ஆர்பிட்டரி கோட் ( arbitary code ) இயக்கப்படலாம் என்ற CIVN-2019-0080 எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்து இருந்தது.
வாட்ஸ்அப் நிறுவனத்தில் இருக்கும் பெயர் சொல்ல விரும்பாத தகவல்கள் இதுபற்றி கூறுகையில், "அவர்கள் (அரசு நிறுவனங்கள்) இந்த சம்பவம் குறித்து நேரடியாக எங்களிடம் எதையும் கேட்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த தகவல்களுக்கு பதிலும் கொடுக்கவில்லை, கூடுதலாக வேறு எந்த தகவல்களையும் அரசு கேட்கவில்லை "என்று தெரிவித்தார்.
இதற்கு, அரசு தரப்பில் இருக்கும் ஒருவர் 'தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்' நாளிதழுக்கு தெரிவிக்கையில் " வாட்ஸ்அப் கொடுத்த பதில்கள் மிகவும் தொழிநுட்ப வாசகங்களாக மட்டும் இருந்தன. மேலும், பயனர்களின் தனியுரிமை பாதிபுக்குள்ளானது என்று எதையும் சொல்லவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கு வாட்ஸ்அப், மே மாதம் முழுவதும் நாங்கள் வெறும் பாதிகாப்ப பிரச்சனை என்றே தான் நினைத்தோம், பின்பு சிட்டிசன் ஆய்வகம் நடத்திய ஆய்வின் போதுதான் பெகாசஸ் ஸ்பைவேரின் தொடர்பை அறிந்தோம்' என்று கூறினார்.
இந்நிலையில் ,கடந்த செப்டம்பர் மாதமே பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட 121 பயனர்கள் விவரத்தை கொடுத்திருப்பதாக சொல்வது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.